/* */

இமாச்சல பிரதேசத்தில் 66 சதவீத வாக்குப்பதிவு டிச.8 ல் வாக்கு எண்ணிக்கை

himachal pradesh assembly 66 percent polling இமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இதில் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

HIGHLIGHTS

himachal pradesh assembly 66 percent polling


பனிப்பொழிவின் காரணமாக கவச உடையில் அமர்ந்துள்ள தேர்தல் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள்(கோப்பு படம்)

himachal pradesh assembly 66 percent polling

இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கான ஒரே கட்ட வாக்குபதிவானது நேற்று நடந்தது. 412 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில் 66சதவீத வாக்குப்பதிவு நடந்தது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜ தலைமையிலான ஆட்சியே நடந்து வந்தது. முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இருந்தார். அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் அதற்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. இம்மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 68 ஆகும்.

ஒரே கட்ட ஓட்டுப்பதிவு என்பதால் 7884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவானது துவங்கியது. ஆரம்பத்தில் குறைந்த வாக்காளர்களே வந்திருந்தாலும் போகப் போக விறுவிறுப்படைநத்து. இயற்கையும் ஒத்துழைத்தது. இதனால் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்கினை பதிவு செய்தனர்.

himachal pradesh assembly 66 percent polling


இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவிலும் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற பனியின்மீதே நடந்து வரும் வாக்காளர்கள். (கோப்பு படம்)

himachal pradesh assembly 66 percent polling

பெரும்பாலான வாக்குச்சாவடிகள் உள்ள ஏரியாக்களில் கடும் பனி மூட்டம் இருந்தும் வாக்காளர்கள் கவச உடைகள் அணிந்து வந்து நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்தனர். 100வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் வாக்காளர், மற்றும் ஒரு பெண் வாக்காளர் ஆகியோரும் வந்து வாக்களித்தனர்.

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமல் ஆகியோர் அவர்களுடைய வாக்குச்சாவடியான ஹரிம்பூரில் வாக்களித்தனர். அகில இந்திய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா தனது பிலாஸ்பூர் தொகுதியில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மூத்ததலைவர் முகேஷ் அக்னிஹோத்திரி ஹரோலி தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா சிம்லாவிலும் தனது வாக்கினை பதிவு செய்தனர்.

மாநில தேர்தல் அதிகாரி மகேஷ் கார்க் தெரிவிக்கும்போது, இமாச்சல சட்டசபை தேர்தலையொட்டி இத்தேர்தல் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்காக 25 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் இத்தேர்தலில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் ஏதும் எங்கும் நடக்கவில்லை . மிக அமைதியான முறையில் தேர்தலை நடத்த வாக்காளர்களும் பெரும் ஒத்துழைப்பு அளித்தனர். தேர்தலில் 66சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனது. இதன் வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் மாதம் 8 ந்தேதி எண்ணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

himachal pradesh assembly 66 percent polling


உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்(கோப்பு படம்)

himachal pradesh assembly 66 percent polling

சென்டிமென்ட் மாறுமா?

இமாச்சல பிரதேச மாநிலத்தினைப் பொறுத்தவரை இதுவரையில் காங்கிரசும், பாஜவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இந்த முறை இந்த சென்டிமென்ட் மாறுமா? மாறும் என பாஜ தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டதோடு நாங்கள்தான் ஆட்சியை மீண்டும் பிடிக்கப்போகிறோம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்காகவே பிரதமர் நரேந்திரமோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷா, பாஜ தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் களத்தில்இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதுகுறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் ஆட்சியில் செய்யா பல நல்ல திட்டங்கள் கடந்த பாஜ ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இம் மாநில மக்கள் பாஜவுக்கு வாக்களித்திருப்பார்கள் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் மூத்த குடிமக்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவோம், மேலும் வீடுகளுக்கு 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவித்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்துள்ளது.பாஜவைப் பொறுத்தவரை மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவோம் என தெரிவித்துள்ளது.

டிச.8ல் வாக்கு எண்ணிக்கை

குஜராத் மாநில சட்டசபை தேர்தலும் நடக்க இருப்பதால் அது முடிந்தவுடன் டிசம்பர் மாதம் 8 ந்தேதியன்று இமாச்சல பிரதேச சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடக்க உள்ளது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் இமாச்சலில் மீண்டும் பாஜ ஆட்சியமைக்க போகிறதா? அல்லது எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க போகிறதா? என அன்றைய தினமே தெரிய வரும்.

Updated On: 13 Nov 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...