/* */

உளவுத்துறை அறிக்கையால் மோடிக்கு அக்னி பரீட்சையாக மாறும் குஜராத் தேர்தல்

Gujarat Election News -உளவுத்துறை அறிக்கையால் மோடிக்குகுஜராத் தேர்தல் களம் அக்னி பரீட்சையாக மாறி வருகிறது.

HIGHLIGHTS

உளவுத்துறை அறிக்கையால் மோடிக்கு அக்னி பரீட்சையாக மாறும் குஜராத் தேர்தல்
X

Gujarat Election News - தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு‌.க, அ.தி.மு.க. என இந்த இரு கட்சிகளுமே மாறி, மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து எப்படி கோலோச்சி வருகின்றனவோ அதே போன்று குஜராத் மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. ஆட்சி கட்டிலில் தொடர்ந்து அமர்ந்து பயணித்து வருகிறது. தமிழ்நாட்டிலாவது தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் குஜராத்தில் நிலைமை அப்படி அல்ல. பா.ஜ.க. என்ற ஒற்றைக் கட்சியே தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகிறது.


வலுவான பிரதமர் மோடி

Gujarat Elections news,Intelligence Report, PMModi, Fiery Test newsஉலக நாடுகளின் பட்டியலில் வலுவான பிரதமர் யார் என பட்டியலிட்டால் அதில் முதல் 10 இடத்துக்குள் வருபவரான நமது பாரத நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு அரசியல் மாற்றத்தின் போது இடைக்கால முதலமைச்சராக வந்த மோடி, பின்னர் அங்கே மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் அகில இந்திய அரசியலுக்கு வந்தார், பிரதமர் ஆனார். இரண்டாவது முறையாகவும் தற்போது பிரதமர் பதவியை அலங்கரித்து வருகிறார். அவருடைய உற்ற தோழன் என்று போற்றப்படுகிற அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். இந்த இரு வல்லவர்களின் கூட்டணியால்தான் பா.ஜ.க. இந்தியா முழுவதும் ஆளுவது மட்டும் இன்றி பல மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வெற்றி வாகை சூடி உள்ளது. அவர்கள் காலூன்ற முடியாத இடம் என்று சொன்னால் அதில் முதலிடம் பெறுவது தமிழ்நாடும், நமது அண்டை மாநிலமான கேரளாவும்தான். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அவர்களது பாச்சா எதிர்பார்த்த அளவு பலிக்கவில்லை.

குஜராத் சட்டமன்ற தேர்தல்

Gujarat Elections news,Intelligence Report, PMModi, Fiery Test newsஇந்த சூழலில் தான் குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் அதாவது வருகிற டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் அங்கு அரசியல் கட்சி தலைவர்களின் முதல் கட்ட பிரச்சார வியூகம் இப்போதே தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். ஏற்கனவே, பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கிச் சென்றிருக்கிறார். அமித்ஷாவும் அதே மாதிரி வந்து சென்றிருக்கிறார். இன்னும் பல மத்திய மந்திரிகளும் குஜராத்தில் முகாமிட்டு இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு தேர்தல் வியூகப் பணிகளை இப்போது தொடங்கி விட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் இப்போதே குஜராத் மாநிலத்தில் முகாமிட்டு தனது பிரசார யுக்திகளை திட்டமிட்டு தொடங்கி விட்டார்.


அரவிந்த் கெஜ்ரிவாலின் அசுர வளர்ச்சி

Gujarat Elections news,Intelligence Report, PMModi, Fiery Test newsஆம் ஆத்மியின் வளர்ச்சி என்பது கடந்த 10 ஆண்டுகளில் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பல கட்சிகளையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ் என மாறி மாறி வந்த டெல்லி மாநிலத்தை பிடித்தப் பின்னர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெல்லி அருகில் உள்ள பஞ்சாப்பிலும் கால் ஊன்றி ஆட்சியைப் பிடித்து உள்ளது. இப்போது அவர்களது அடுத்தப் பார்வை குஜராத் தான். காங்கிரஸ் கட்சியில் ஒரு வலுவான தலைமை இல்லாதது, மூத்த தலைவர்களிடம் ஒற்றுமையின்மை போன்ற காரணங்களால் பா.ஜ.க.வுக்கு மாற்று எதிர்க்கட்சி என்று மோடிக்கு நிகரான தலைவர் யாரையும் அக்கட்சியில் கூற முடியவில்லை. இந்த சூழலில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை மோடிக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் என பிரபலப்படுத்திக் கொள்ளும்விதமாக குஜராத் சட்டமன்றத் தேர்தலை ஒரு பரீட்ச்சார்த்த களமாக பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்.

முன்னாள் மத்திய அரசு அதிகாரி, ஊழலுக்கு எதிரானவர் சிறிய மாநிலமான டெல்லியில் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் என்ற ஒரு மிகப்பெரிய பலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருக்கிறது. அதையே மூலதனமாக வைத்து குஜராத் தேர்தலையும் எதிர்நோக்கி இருக்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் குஜராத் மாநிலம் தொடர்பான கருத்துக்கணிப்புகளை இன்னும் அச்சு ஊடகமும் சரி விஷுவல் ஊடகமும் சரி தொடங்கவில்லை.

உளவுத்துறையின் அதிர்ச்சி அறிக்கை

Gujarat Elections news,Intelligence Report, PMModi, Fiery Test newsஆனால், அந்த மாநிலத்தில் யாருக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என உளவுத்துறை ஒரு ரகசிய புள்ளி விவரத்தை சேகரித்தது. இந்த புள்ளி விவரம் தற்போதைய ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வுக்கு எதிராக இருப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு ஓரளவு ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. இதனை தனக்கு மிகப்பெரிய பலமாக கருதி, அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கி விட்டார். பொதுவாக குஜராத் மாநிலத்தை மகாத்மா காந்தி பிறந்த புனித மண் என்று சொல்வதோடு ஆன்மீக பூமி என்றும் சொல்வார்கள். எப்படி தமிழ்நாட்டை திராவிட மண் என்று நாம் போற்றி வருகிறோமோ அதேபோல் அங்குள்ள மக்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். அதனால் ஆன்மீகம் தொடர்பான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு புதிய திட்டத்தை வகுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு பா.ஜ.க.அரசு அளித்த வாக்குறுதியின்படி நிதி உதவி வழங்கப்படவில்லை. இதனால் பசு பாதுகாப்பு மைய உரிமையாளர்கள் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களின் சிரமம் எனக்குத் தெரியும். ஆதலால் டெல்லியில் பசு ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக நாள்தோறும் ரூ. 40 வழங்கி வருவது போல் குஜராத் மாநிலத்திலும் ஆம் ஆத்மி அரசு அமைந்தால் இங்கு உள்ள ஒவ்வொரு பசு பராமரிப்புக்காகவும் நாள்தோறும் ரூ. 40 வழங்கப்படும். பால் கறக்காத பசுக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்காக பராமரிப்பு கொட்டகைகள் அமைக்கப்படும். மாநிலத்தில் பசுக்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அக்னி பரீட்சை

Gujarat Elections news,Intelligence Report, PMModi, Fiery Test newsஆன்மீகம் தொடர்பான இந்த வாக்குறுதி பா.ஜ.க.வின் அடித்தளத்தையே அசைக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே, உளவுத்துறை அறிக்கையும் தங்களது அரசுக்கு எதிராக இருப்பதால் பிரதமர் மோடிக்கு குஜராத் தேர்தல் களம் ஒரு அக்னி பரீட்சையாக மாறி வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்வியுற்றால்,அடுத்து நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அது ஒட்டுமொத்த பிரதமர் மோடியின் செல்வாக்கை ஒரே அடியாக கீழே தள்ளிவிடும் என்பதில் ஐயமில்லை. ஆதலால் ஆம் ஆத்மிக்கு எதிரான வியூகங்களை பா.ஜ.க இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டது.


Gujarat Elections news,Intelligence Report, PMModi, Fiery Test newsபொதுவாக எதிரியை பலவீனப்படுத்திவிட்டுக் களத்தில் மோதலுக்கு இறங்குவது தான் வெற்றி வீரனுக்கு அழகு என்பார்கள். அந்த வகையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்கு வங்கியை சிதறடித்து பலவீனப்படுத்தும் முயற்சிகளை இப்போது பா.ஜ.க. கையில் எடுத்து அதனை எந்த உளவுத்துறை தங்களுக்கு எதிரான அறிக்கையை சமர்ப்பித்ததோ அவர்கள் மூலமாகவே நிறைவேற்றத் தயாராகி வருகிறது, பா.ஜ.க தலைமை.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Oct 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?