/* */

குஜராத் முதல் கட்ட சட்டசபை தேர்தல் 60 சதவீத வாக்குப் பதிவு:கலவரம் ஏதுமில்லை

gujarat assembly election ,first phase 60 percent polling குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலானது இரு கட்டங்களாக நடக்கிறது. நேற்று நடந்த முதல் கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் 5 ந்தேதி நடக்கிறது.

HIGHLIGHTS

குஜராத் முதல் கட்ட சட்டசபை தேர்தல்     60 சதவீத வாக்குப் பதிவு:கலவரம் ஏதுமில்லை
X

குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் தலைவர்களான  நரேந்திர மோடி, கேஜ்ரிவால், ராகுல் காந்தி 

gujarat assembly election ,first phase 60 percent polling

குஜராத் சட்டசபைப் பதவிக்காலமானது முடிவடைய உள்ளதால் சட்டசபைத் தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அந்த வகையில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவும், டிச.5 ந்தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடக்கும் எனவும், இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிச. 8 ந்தேதியன்று நடக்கும் அன்றைய தினமே இமாச்சல பிரதேச மாநிலத்தின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

gujarat assembly election ,first phase 60 percent polling


குஜராத் முதல் கட்ட சட்டபைத் தேர்தலில் தங்களுடைய வாக்கினைப் பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கும் பெண் வாக்காளர்கள் (கோப்பு படம்)

gujarat assembly election ,first phase 60 percent polling

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 182 ஆகும். இதில் முதல் கட்டத் தேர்தலாக நேற்று 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இத்தொகுதிகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவானது மாலை 5 மணிவரைநடந்தது. மிகவும் அமைதியான முறையில் நடந்தது. ஒரு சில சிறிய பிரச்னைகள் ஆங்காங்கே நடந்தது. ஜாம் ஜோத்பூரில் பெண்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்காததைக் கண்டித்து பெண்கள் போராட்டம் செய்தனர்.

வாக்குப்பதிவு துவங்கிய 3 மணிநேரத்திற்குள் பல வாக்குச்சாவடிகளில் இருந்து இவிஎம் மெஷின் கோளாறு குறித்த புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து கோளாறு ஏற்பட்ட மெஷின்களுக்கு பதிலாக மாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டு சரி செய்யப்பட்டன.

நேற்று நடந்த 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் அதிக பட்ச வாக்குப்பதிவானது பழங்குடி இனத்தவர் அதிகம் வசிக்கும் தபி மற்றும் நர்மதா மாவட்டங்களில் நடந்தன.தபியில் 72.32 சதவீத வாக்குப்பதிவும்,நர்மதாவில் 68.09 சதவீத வாக்குப்பதிவும் நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

gujarat assembly election ,first phase 60 percent polling


குஜராத் முதல் கட்ட சட்ட சபைத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்த முதியவருக்கு அடையாள மையிடும் தேர்தல் பணியாளர் (கோப்பு படம்)

gujarat assembly election ,first phase 60 percent polling

குறைந்த பட்ச வாக்குப்பதிவு நடந்த இடமாக சவுராஷ்டிரா பகுதியின் பாவ் நகரில் 51,34 சதவீதம் ஆகும். 100 வயது, 104 வயதுடைய இரண்டுபேர் வாக்களித்ததை தேர்தல் கமிஷன் தன் அதிகாரப்பூர்வ வெப்தளத்தில் பகிர்ந்தது.

மேலும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி வடக்கு ஜாம்நகர் பாஜ வேட்பாளர் ரிவேபா ஜடேஜா, கணவர் ரவீந்திர ஜடேஜா, பாஜ முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, மாநில பாஜ தலைவர் சி.ஆர். பாட்டீல், மாநிலங்களவை எம்.பி. பரிமல் நாத் வானி, ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் கோபால் இடாலியா ஆகியோர் நேற்று வாக்களித்த முக்கிய விஜபிக்கள் ஆவர்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது டிச. 5 ந்தேதி அன்று நடக்கிறது. இதில் 93 தொகுதிகள் உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரமானது நேற்றுமாலையோடு முடிவடைந்ததால் நாளை வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகிறது.

ஆளும் கட்சியான பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவி வருவதால் யாருக்கு வாய்ப்பு? என்பது அறுதியாக சொல்லமுடியவில்லை.முதல் கட்ட வாக்குப்பதிவானது 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு மட்டும் நடந்தது. மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பெண்கள் மட்டும் 70 பேர். 25434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.39 கோடி

gujarat assembly election ,first phase 60 percent polling


குஜராத் சட்டசபைக்கு நேற்றுநடத்த முதல் கட்ட தேர்தலில் வாக்கு பதிவு செய்ய வந்த வயதான பெண் தன் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பிக்கிறார் (கோப்பு படம்)

gujarat assembly election ,first phase 60 percent polling

பலத்த பாதுகாப்பு

ஆளும் கட்சியான பாஜவே தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடக்க வாய்ப்பிருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குப்பதிவு பணிக்காக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி

இம்முறை எப்படியும் அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் எனஆம்ஆத்மி தீவிர பிரச்சாரத்தோடு தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான பழைய பென்சன் திட்டம் , உள்ளிட்ட பலகோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளது. கடைசி நாள் பிரச்சாரத்தில் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவத்சிங்மான் அனல் பறக்கும் பிரச்சாரத்தினை மேற்கொண்டார்.அகில இந்திய காங். தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தேர்தல் பிரச்சாரத்தினை குஜராத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொண்டார். அவருடன் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்களும் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டனர்.

ஆம் ஆத்மியுடன் போராடும் பாஜ

டில்லியில் கடந்த பல வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜவால் அம்மாநில சட்டசபை தேர்தலில்வெற்றி பெற முடியவில்லை. கேஜ்ரிவால் ஆம் ஆத்மி தான் ஆட்சி செய்து வருகிறது. அதேபோல் பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் பாஜ, காங்கிரசுக்கு எதிர்ப்பாக ஆம் ஆத்மி களத்தில் இறங்கி வெற்றி வாகையினை சூடியது.

தற்போது குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள சட்டசபைத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. இதனால் களத்தில் இறங்கி ஆம்ஆத்மியானது தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டது. மேலும் மக்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி பாஜ, மற்றும் காங்கிரசுக்கு பலத்த எதிர்ப்பாக நிற்பதால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. யாருடைய ஓட்டுகளைப் பிரிக்கும் என்று தெரியாததால் இரு கட்சிகளுமே சற்று எச்சரிக்கை அடைந்துள்ளது. பாஜ தலைவர்கள் ஆம் ஆத்மியின் செயல்பாட்டினைக்குறைக்க பல வகைகளில் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் தபால் வாக்கு சேர்க்காமல் 60 சதவீதம். அதனைச் சேர்க்கும் பட்சத்தில் சற்று உயர வாய்ப்புள்ளது.தற்போது இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரமானது சூடுபிடித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது வரும் 8ந்தேதி தெரியவரும். அன்று மாலையே குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும்.

Updated On: 2 Dec 2022 6:55 AM GMT

Related News