/* */

பயில்வானுக்கு சிறப்பு டூடுள் வெளியிட்ட கூகுள்! யார் இந்த காமா பயில்வான்?

‘தி கிரேட் காமா’ என்று அழைக்கப்பட்ட குல்ஹாம் முகம்மது பக்‌ஷ் பட் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

பயில்வானுக்கு சிறப்பு டூடுள் வெளியிட்ட கூகுள்! யார் இந்த காமா பயில்வான்?
X

ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக தங்கள் பங்களிப்பினை அளித்தவர்களின் முக்கிய நாளை கொண்டுவது கூகுளின் வழக்கம். அந்த வகையில் 20 ஆம் நூற்றாண்டில் மல்யுத்தத்தில் புகழ்பெற்ற வீரராக திகழ்ந்த குல்ஹாம் முகம்மது பக்‌ஷ் பட் (Ghulam Mohammad Baksh Butt) -இன் பிறந்த நாளான இன்று அவர் சாதனைகளை குறிக்கும் விதமாக சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது கூகுள்

காமா பயில்வான் என்று அன்புடன் அழைக்கப்படும் குலாம் முகமது பக்‌ஷ் பட் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரஸ் மாவட்டத்தில் ஜபோவால் கிராமத்தில் 1878 மே 22-ல் பிறந்தார். இவரது குடும்பத்தினர் மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர். அந்த வழியில், காமா பயில்வான், தன் திறமையால் உலக அளவில் புகழ்மிக்க வீரராக உயர்ந்திருக்கிறார்.


இவர் தனது சிறு வயதிலேயே தினமும் 500 முறை, 500 தண்டால் எனக் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். 1888-ல் நடைபெற்ற பஸ்கி போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களை வென்று முதல் பரிசைத் தட்டி சென்றிருக்கிறார். இளம் வயதிலேயே போட்டிகளில் வெற்றி பெற்ற குலாம் முகமதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மற்றொரு சம்பவம், சுமார் 1,200 கிலோ எடையுள்ள பாறையைத் அவர் தூக்கி நிறுத்தியதுதான். அந்தப் பாறை, அவரின் புகழினை பெருமிததோடு நினைவு கூறும் வகையில் வதோதரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

மல்யுத்தத்தில் உலக சாம்பியனாகத் திகழ்ந்த ஏறத்தாழ ஏழடி உயரம் கொண்ட ரஹீம் பக்‌ஷ் சுல்தானிவாலா எனும் வீரருடன், 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட காமா பயில்வான் நான்கு முறை மல்யுத்தத்தில் மோதியிருக்கிறார். மூன்று முறை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. நான்காவது முறை காமா பயில்வான் வென்றிருக்கிறார்.

வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, காமா பயில்வானுக்கு வெள்ளியில் செய்யப்பட்ட தண்டாயுதத்தை அன்பளிப்பாக அளித்தார். சுதந்திரத்திற்கு பின், பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் குடியேறிய அவர், 1960-ல் மறைந்தார்.


இவர் 1910 மற்றும் 1927 ஆம் ஆண்டு உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமைக்குச் சொந்தகாரர் காம பயில்வான்.

Updated On: 22 May 2022 1:44 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  4. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  5. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  6. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  8. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  9. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...