/* */

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் வயது முதிர்வின் காரணமாக இன்று காலமானார்.

HIGHLIGHTS

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்
X
முலாயம் சிங் யாதவ்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் தேசிய அரசியலை, அதாவது நமது நாட்டில் யார் பிரதமர் ஆக வருவார்கள் என்பதை நிர்ணயிக்கும் வலுவான ஒரு மாநிலம் என்ற பெருமைக்குரிய உத்தர பிரதேச மாநிலத்தில் முதலாம் சிங் யாதவ் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்து உள்ளார். 7 முறை சட்டமன்ற உறுப்பினர், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெருமையும் அவருக்கு உண்டு. மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். உத்தர பிரதேச அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக முலாயம் சிங்க யாதவ் விளங்கி வந்தார்.

1989 முதல் 1991 வரை பின்னர் 1993 முதல் 1995 வரை இறுதியாக 2003 முதல் 2007 வரை அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முலாயம் சிங் யாதவியின் மகனுமான அகிலேஷ் யாதவ் தனது தந்தை இறப்பு செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கடந்த ஒரு மாத காலமாகவே முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேச மாநிலத்தின் எடவா மாவட்டம் கைஃபா என்ற இடத்தில் 1939 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பிறந்தார். முதுகலை பட்டதாரியான இவர் அடிப்படையில் ஒரு விவசாயி ஆவார்.

முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு இந்திய குடியரசு தலைவர் திரோளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.முலாயம் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான கைஃபா கிராமத்தில் நடைபெற இருக்கிறது.

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் வட இந்தியாவில் சக்தி வாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாய் சிங் யாதவ். இந்திய அளவில் அனுபவமும் பலமும் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார். முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேச மற்றும் தேசிய அரசியலில் புகழ்பெற்றவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை காக்க போராடிய முக்கிய படைவீரர். அவர் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சராக வலுவான இந்தியாவை கட்டமைக்க உழைத்தவர். அவரது நாடாளுமன்ற பேச்சுக்கள் அறிவு சார்ந்தவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் வெவ்வேறு மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை உரையாடி இருக்கிறோம். இருவருக்கும் இடையிலான நெருக்கம் தொடர்ந்ததுடன் அவரது கருத்துக்களையும் எப்போதும் கவனித்து வந்தேன். அவரது மறைவு என்னை காயப்படுத்துகிறது.அவரது குடும்பத்தினருக்கும் லட்ச கணக்கான ஆதரவாளர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 11 Oct 2022 4:53 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்