/* */

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

RBI Latest News -மத்திய அரசின் கொள்கை முடிவு மீது லட்சுமணரேகை வரம்பை நீதிமன்றம் நன்கு அறிந்துள்ளபோதும், அந்த முடிவை ஆய்வு செய்வது அவசியமாகிறது என்று உச்சநீதி மன்றம் கூறியது

HIGHLIGHTS

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
X

RBI Latest News - கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ. 1000 மதிப்புள்ள நோட்டுகளை பயன்பாட்டிலிருந்து நீக்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இது மத்தியஅர சின் கொள்கை முடிவு என்பதால், இதில் தலையிட முடியாது என்று கூறி இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றங் களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கும் தடை விதித்தது.

அப்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கையில் சட்டப் பிழைகள் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் கட்டிக்காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தின் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 16 அன்று உத்தரவிட்டது.

அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, பணமதிப்பிழப்பு சட்டத்துக்கு எதிராக சரியான கண்ணோட்டத்தில் மனு தாக்கல் செய்யப் படவில்லை எனில், இந்தப் பிரச்னை அடிப்படை சட்ட அறிவு சார்ந்ததாகவே இருக்கும் என்று கூறினார்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், இது போன்ற அடிப்படை சட்ட அறிவு சார்ந்த விவகாரங்களுக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றார். துஷார் மேத்தாவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவேக் தாராயணன் என்ற மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், இந்த விவகாரத்தை உச்சநீதி மன்ற முத்தைய அமர்வு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியிருக்கும் நிலையில், இதனை விசாரிப்பது நேரத்தை வீணடிப்பது என்று எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ப.சிதம்பரம், இதுபோன்ற பணமதிப்பிழப்பு நடவ டிக்கைக்கு நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றுவது அவசியம் என்று கூறினார்

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு மீது நீதிமன்ற ஆய்வுக்கான லெட்சுமணரேகை வரம்பை நீதிமன்றம் நன்கு அறிந்துள்ளது. இருந்தபோதும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அடிப்படை சட்ட அறிவு சார்ந்ததா அல்லது பயனற்றதா, நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதா என்பது குறித்து பதிலளிக்க வேண்டியிருப்பதால், இந்த விவகாரத்தை ஆய்வு செய்வது அவசியமாகிறது.

மேலும், மத்திய அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்யப்படுவதும் அவசியமாகிறது' என்று கூறினர்

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரகக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம் பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Oct 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  3. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  4. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  5. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  9. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்