ஆமாம்...! யார் இந்த பீனிக்ஸ் பறவை திரௌபதி முர்மு? நெருப்பாற்றில் நீந்தி வந்த வரலாறு...!!

திரெளபதி முர்மு, திடீரென தேசிய அரசியல் களத்தில் பெண் புயலென புகுந்து விட்டார் . இவரது குடும்ப பூர்வீகம், அரசியல் பின்னணி, அனுபவம் தான் என்ன? பார்ப்போம்...!

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆமாம்...! யார் இந்த பீனிக்ஸ் பறவை திரௌபதி முர்மு? நெருப்பாற்றில் நீந்தி வந்த வரலாறு...!!
X

இந்திய அரசியலில் பெண் புயல் என புகுந்த பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர்வேட்பாளர் திரௌபதி முர்மு. முகத்தில் அதீதமான பூரிப்பு பொங்க வெண் புன்னகையை சிந்தும் காட்சி.

பா.ஜ கூட்டணி கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு. இவருக்கு வயது 64 உலக அரசியல் அரங்கில் இனி பேசப்படும் தலைப்புச் செய்தி ஆகி விடுவார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே, இவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளித்தது, இவரது முக்கியத்துவத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியுள்ளது.

முர்முவின் எளிமையை விளக்கும் ஒரு வித்தியாசமான வீடியோ பரவி வருகிறது. அதில், ஒரு சிறிய ஆலயத்திற்கு சென்று, நின்று நிதானமாக சாமியை வழிபடுகிறார், முர்மு. பின்னர் அங்குள்ள பெண் ஒருவர் துடைப்பத்தை தர எந்த வித பதட்டமும் இன்றி, அதனை கையில் வாங்கி வளாகத்தை கூட்டி பெருக்குகிறார், முர்மு. அவரை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் சூழ்ந்து வியந்தபடியே அவரை பார்க்கின்றனர். இதைப்போல இன்னும் பல வீடியோக்கள் முர்முவை பிரபலப்படுத்த அடுத்தடுத்து வெளியாகலாம்.

அதுசரி, யார் இவர்? ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகி விட்ட திரெளபதி முர்மு 1958 ஜூன் 20 ஆம் தேதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் பிராஞ்சி நாராயண் டுடு.இவர் சந்தல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

முர்முவின் கணவர் பெயர் சியாம் சரண் முர்மு. இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். திரெளபதி முர்முவின் வாழ்க்கை தனிப்பட்ட துயரங்கள் மிகுந்தது. கணவர் மற்றும் இரண்டு மகன்களின் இழப்பு பெரிதும் மனம் உடைந்தவர். ஆனால் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக நம்பிக்கையால் எழுந்தவர்.

இவர், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவ்ர். இதன்பின்னர் ஒடிசா அரசியலில் நுழைந்தவர். தனது சொந்த மாவட்டமான மயூர்பஞ்சில் உள்ள ராய்ராங்பூ தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு 2,000 மற்றும் 2,004 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ராய்ராங்பூரின் கவுன்சிலராக வெற்றிபெற்று தனது தேர்தல் அரசியல் பயணத்தை மகிழ்ச்சிகரமாக தொடங்கியவர் தான் முர்மு. 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் பா.ஜ.க.,வின் எஸ்.டி மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வகித்தவர். முன்னதாக கவுன்சிலர் ஆனபோதே, 1997ம் ஆண்டு பாஜகவின் எஸ்.டி மோர்ச்சா மாநில துணைத் தலைவர் என்ற பதவிக்கு தேர்வு பெற்றவர்.

பிஜு ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சியின்போது ஒடிசாவின் போக்குவரத்து, வர்த்தகம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறையின் அமைச்சராக பதவி வகித்தவர். இதையடுத்து, 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை ஜார்கண்ட் ஆளுநராக திரெளபதி முர்மு பதவி வகித்தார். இவர் மே 2015 ஆம் ஆண்டு முதல் 2021 வரை எட்டாவது ஆளுநராக இருந்தவர். அந்த மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் முர்மு. ஒடிசாவில் இருந்து இந்திய மாநிலம் ஒன்றுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடித் தலைவரும் இவர் தான்.

இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல். இவர் 25 ஜூலை 2007 முதல் 24 ஜூலை 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். தற்போது, திரெளபதி முர்மு குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்னும் பெருமையை பெறுவார்.

இதை கணித்துதான், தீர்க்கதரிசி போல திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடி தமது டுவிட்டரில் அட்வான்ஸ் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், திரௌபதி முர்மு ஜி தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார். திறமையான நிர்வாக அனுபவத்துடன் ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர். அவர் நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன் என்று தமது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலிலேயே, அப்பதவிக்கு முர்மு பெயர் அடிபட்டதாகவும், ஆனால், அப்போது பீகார் ஆளுனராக இருந்த ராம்நாத் கோவிந்த் எதிர்பாராமல் அறிவிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஐந்து ஆண்டுகள் கழித்தும் அதிர்ஷ்டம் விட்டு விலகாமல், முர்முக்கு வாய்ப்பு வழங்க காத்திருந்தது தான் ஆச்சரியமான செய்தி!

எது, எப்படியோ, ஆன்மீகம், யோகா என பம்பரமாக சுழன்றடிக்கும் பிரதமர் மோடியின் தீர்க்க தரிசனம், முர்மு குடியரசு தலைவர் பதவி விஷயத்திலும் பலிக்கட்டும்...!

Updated On: 2022-06-22T21:05:49+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்