/* */

dominance of artificial intelligence in tamil செயற்கை நுண்ணறிவு (AI) வரவால் வேலையிழப்புஅபாயம்: நிலை தொடர்ந்தால்....?

dominance of artificial intelligence in tamil உலகத்தையே தற்போது ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பது செயற்கை நுண்ணறிவுதாங்க...இது கால்பதிக்காத துறைகளே இல்லை என்ற நிலை வந்துடுமாம்..

HIGHLIGHTS

dominance of artificial intelligence in tamil  செயற்கை நுண்ணறிவு (AI) வரவால் வேலையிழப்புஅபாயம்: நிலை தொடர்ந்தால்....?
X

நல்லா  பாருங்க... மனுஷங்களே கெட்டாங்க... எவ்வளவு அருமையா வேலை பார்க்குதுன்னு (கோப்பு படம்)

dominance of artificial intelligence in tamil

உலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அறிமுகமானாலும் அவையெல்லாம் மனிதர்களின் வேலைகளுக்கு ஆப்பு வைத்ததில்லை. ஆனால் தற்காலத்தில் எல்லா இடங்களிலும் ஆக்ரமித்த AI -யால் பலரது வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சரிங்க ... அப்படி என்ன இந்த செயற்கை நுண்ணறிவு செய்யுதுன்னு கேட்கிறீங்களா...ஏங்க ஒரு மனுஷன் செய்ய வேண்டிய வேலையை கண நிமிஷத்தில் கச்சிதமாக பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி முடிச்சுடுதுங்க.. வேலை சீக்கிரம் முடிவடையவேண்டும் என்று தான் அத்தனை முதலாளிகளும் எதிர்பார்ப்பார்கள். அதற்கு ஆட்களிடம் வேலை சொல்வதை விட செயற்கை நுண்ணறிவு கிட்டசொன்னா ஒரே நிமிஷத்திலே உங்களுக்கு அவுட் புட் அல்வா போல் கிடைக்குதுன்னா அவங்க ஏங்க ஆளுங்களை நம்பறாங்க...



dominance of artificial intelligence in tamil

செயற்கை நுண்ணறிவை பல்வேறுநிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.சாட்ஜிபிடியும் ஒன்று. இவற்றின் வருகையால் தொழில்நுட்ப ரீதியான ஆபத்து நமக்கு காத்துள்ளது. அதாவது இது பல துறைகளிலும் பயன்படுத்தப்படுவதால் மனிதர்களின் வேலைகளுக்கு ஆப்பு வைக்கும் நிலை தான் தற்போது உருவாகி உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்இந்த பூமியில். ஆனால் ஒரு சில வளர்ச்சிகள் மனிதர்களைப் பாதித்ததில்லை. ஆனால் இந்த AI வரவானது பலரது வேலைக்கு உலை வைத்துவிட்டது என்றே சொல்லலாம். ஆமாங்க...வேலையிழப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருப்பதாக சொல்லப்படுகிறது.

dominance of artificial intelligence in tamil


இந்த பிரச்னையானது வெகு காலத்திற்கு முன்பாகவே அமெரிக்காவில் நடந்தது. தற்போது நம் நாட்டிலும் நடக்க துவங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப வரவால் மேற்கு வங்கத்தில் ஒரு மாணவி பகுதிநேரமாக பார்த்து வந்த வேலையானது பாதிப்படைந்துள்ளது. அதாவது 22 வயது கொண்ட சரண்யா பட்டாச்சார்யா என்ற மாணவி கல்லுாரியில் படித்துக்கொண்டே மாலை வேளைகளில் தனியார் நிறுவனத்தில் காபி ரைட்டராக வேலை பார்த்து வந்தார். தற்போது சேட் ஜிபிடி வரவால் தன்னுடைய வேலை எவ்வாறு பாதிப்படைந்துள்ளது என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

dominance of artificial intelligence in tamil


இந்த பார்ட் டைம் வேலை மூலம் அவர் மாதந்தோறும் இருபதாயிரம் சம்பாதித்துள்ளார். இந்த சேட் ஜிபிடியானது கடந்த 2022 ம் ஆண்டு நவம்பரில் அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது இதனால் இவர் பெருத்த பாதிப்புகளைச் சந்தித்துள்ளார். இதற்கு முன்பாக மாதந்தோறும் 10 கட்டுரைகள் வரை எழுதிய இவர் தற்போது இது வந்த பிறகு மாதத்திற்கு ஒன்று வருவதே பெரியதாக இருக்கிறதாம். இதுபோல் குறைவாக வருவது குறித்து அந்த நிறுவனம் எந்த விளக்கத்தையும் இவருக்கு கொடுக்கவே இல்லையாங்க.இருந்தாலும் அவராகவே யூகத்தின் அடிப்படையில் சேட்ஜிபிடி வரவுதான் நம் வேலை குறைந்ததற்கு காரணம் என தெரிந்துகொண்டார். அவர் வேலை பார்த்த நிறுவனம் சேட்ஜிபிடியைப் பயன்படுத்தியதால் இவரது சம்பளம் அவர்களுக்கு லாபமாகிப் போய்விட்டதால்தான் இவருக்கு வேலை அதிகம் தரவில்லை எனவும் தெரிவிக்கிறார்.

10 சதவீத வருமானமே

முன்பு சம்பாதித்ததில் தற்போது நான் 10 சதவீதத்தினை மட்டுமே சம்பாதிக்கிறேன். இதனால் நாங்கள் பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனது அம்மா புடவை வியாபாரம் செய்கிறார். அதிலும் பெரிய லாபம் ஒன்றும் வருவதில்லை. வருமானம் குறைந்து போனதால் எனது குடும்பம் தற்போது பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. நான் படித்துக்கொண்டே சம்பாதித்தது எங்களுடைய குடும்பத்திற்கு பேருதவியாக இருந்தது. தற்போது நான் வேலையில்லா திண்டாட்டத்தினை எதிர்கொண்டுள்ளேன். எனவே எனது வாழ்க்கை நிச்சயமற்றதாகவே எனக்கு தெரிகிறது. எதிர்காலம் குறித்த அச்சத்தினையும் ஏற்படுத்துகிறது.

dominance of artificial intelligence in tamil


அதேபோல் மனிதர்களுக்கும் மெஷினுக்கும் வித்தியாசம் உண்டு அல்லவா. என்னதான் மெஷின் கன்டென்டை எழுதினாலும் அதில் உயிர் இருப்பதில்லை. அதுவே மனிதர்கள்எழுதினால் உணர்ச்சிகரமான வார்த்தைகள்இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும். இயல்பாகவே இயற்கையை எந்த செயற்கையும் எப்போதும் தோற்கடிக்கவே முடியாது. இயற்கை இயற்கைதான் செயற்கை செயற்கைதான்.

dominance of artificial intelligence in tamil


ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் காப்பி ரைட்டிங் துறையில் இருக்கும் தன்னை போன்ற பல இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏஐ தொழில்நுட்பத்தால் பலருக்கும் வேலை இழப்பு ஏற்படும் என எச்சரித்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் இது நடக்க துவங்கி விட்டது. எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்பது போய் தற்போது எதிர்காலம் ஏஐ கையில் சிக்கிவிட்டதா?என எண்ணத் தோன்றுகிறது. என்னதான் ஏஐ டூல் வந்தாலும் அது செய்வது சரியா? அது எல்லாவற்றையும் சரியாக செய்கிறதா? என வேவு பார்க்க மனித பலம் தேவை என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது. ஏங்க மெஷின் தப்பே செய்யாதுங்களா....சொல்லுங்க... மெஷின்லதான் அதிக தவறு வரும்.அதனைத் திருத்த மனித ஆற்றல் அவசியம் தேவைங்கோ...

ஏங்க இன்னிக்கு மெதுவடை வடை சட்டியில் போடக்கூட மெஷின் வந்துவிட்டது. சப்பாத்தி செய்ய மெஷின்... துணி அயர்ன் பண்ணி மடித்து வைக்க மெஷின் வந்துவிட்டது. இது எல்லாம் நம் வேலைக்கு உலை வைக்கவில்லை. நம்வேலையைக் குறைக்க கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்.. ஆனால் இப்போது வந்துள்ளதோ செயற்கை மூளைங்கோ... அடி மடியிலேயே கை வைக்க துவங்கிட்டாங்க...என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. என பாடிக்கொண்டு நாம் நம் வேலையைப் பார்க்க வேண்டியதுதாங்க... என்ன நான் சொல்றது. ஆயிரம்மெஷின்கள் வந்தாலும் மனித ஆற்றல் மனித ஆற்றல்தாங்க....உங்களுக்கு இன்னொன்னு புரிஞ்சுதா... இந்த ஏஐ டூலைக் கண்டுபிடிச்சதே மனித மூளைதான் என்பதை நீ்ங்க மறுப்பீர்களா? சொல்லுங்க...

  • 1
  • 2
Updated On: 6 Aug 2023 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!