/* */

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு

பிரதமர் மோடி திறக்கவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு.

HIGHLIGHTS

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு
X

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதால் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். 28-ம் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. முறைப்படியான அழைப்பிதழ் கிடைத்த பிறகு, இதுதொடர்பாக புதன்கிழமை (இன்று) இறுதி முடிவு எடுக்கப்படும். திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தங்கள் கட்சிகள் புறக்கணிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது

Updated On: 26 May 2023 4:40 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  3. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  4. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  5. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  6. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  9. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  10. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு