/* */

டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை; மீறினால் ரூ. 20 ஆயிரம் அபராதம்

டெல்லியில் அதீத காற்று மாசு காரணமாக அங்கு இனி பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 ரக டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

HIGHLIGHTS

டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை; மீறினால் ரூ. 20 ஆயிரம் அபராதம்
X

புகை கக்கும் டீசல் வாகனங்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

மனிதர்களின் போக்குவரத்துக்கு, வாகனங்களின் பயன்பாடு மிக அவசியமாகிறது. ஆனால், வசதி படைத்த பலர், தங்களது தேவைக்கு மீறிய எண்ணிக்கையில், சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். நான்கைந்து பேர் ஒன்றாக செல்ல வேண்டிய அவசியமான நிலையில், கார்களை பயன்படுத்தலாம். ஆனால், ஒருவர் செல்வதற்கே காரை பயன்படுத்துவது அதிகரிக்கிறது. வீட்டில் உள்ள அனைவருமே தனித்தனி கார்களை பயன்படுத்தும் நிலையில், அதிக வாகனங்களால் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரிக்கிறது. ஒலி மாசு ஏற்படுகிறது. குறிப்பாக, காற்று மாசு அதிகரிக்கிறது.

மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற காற்று மாசு பிரச்னை இருந்து வருகிறது.

டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால், இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், 5 லட்சம் வாகனங்கள் வரை பாதிக்கப்படும். சிஎன்ஜி அல்லது முழு எலக்ட்ரிக் சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி டீசல் கார் ஓட்டுபவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் சுற்று சூழல் மாசு பெரும் அளவில், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் மோசமான சுற்று சூழல் பாதிப்பு அடைந்த நாடுகளில், இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. இங்கு தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு அபாய கட்டத்தை தாண்டி சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகிறது.

இந்த சுற்றுச்சூழல் மாசு அளவை கட்டுக்குள் கொண்டுவர, டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் முக்கிய நடவடிக்கையாக, இனி பிஎஸ்6 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களுக்கு இனி ஓட்ட தடை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளது. அங்கு அளவு 450 மேல் கடந்துவிட்டதால், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இந்தியாவில் டீசல் வாகனங்களின் விற்பனை குறைந்துகொண்டே வருகிறது. பல நிறுவனங்கள் முழு எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு மாறிவருகின்றன. பெட்ரோல் கார்களை விட, டீசல் கார்கள் அதிக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தால், 5 லட்சம் வாகனங்கள் வரை பாதிக்கப்படும்.

இந்த விதியை மீறி டீசல் கார் ஓட்டுபவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அங்கு மிகப்பெரிய அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளதால், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து கட்டுமானப்பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் சிஎன்ஜி அல்லது முழு எலக்ட்ரிக் சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணிகளான சாலைப்பணிகள், மேம்பாலம், மின்சார பணிகள், குழாய் பதிப்பு போன்ற அனைத்தும் நிறுத்தப்பட்டுள்து.

Updated On: 13 Nov 2022 7:08 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...