/* */

இந்தியாவில் கொரோனா முடிவுக்கு வந்ததாக மருத்துவ நிபுணர்கள் தகவல்

Corona End -உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய கொடிய தொற்று நோயான கொரோனா வைரஸ் இந்தியாவில் முடிவுக்கு வந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

இந்தியாவில் கொரோனா முடிவுக்கு   வந்ததாக மருத்துவ நிபுணர்கள்  தகவல்
X

கொடிய பாதிப்பினை ஏற்படுத்திய கொரோனா வைரசின்  மாதிரி படம் (பைல்படம்)

Corona End -


கொரோனா தொற்று பாதித்தவருக்கு சிகிச்சை மேற்கொள்ளும் சிறப்பு கொரோனா வார்டில் கவச உடையில் பணியாளர்கள்.(பைல்படம்)

corena ended over in india medical team announced

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் முடிவுக்கு வந்ததாக மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2020 ம்ஆண்டு உலக நாடுகள் அனைத்திற்கும் போறாத காலம் என்று கூடசொல்லலாம். சீனநாட்டில் உருவெடுத்து அங்கு பரவி பின்னர் தொற்று நோயாக மற்ற நாடுகளுக்கும் பரவியதால் அனைத்துநாடுகளுமே அதிர்ச்சியில் உறைந்தன. இதுபோன்றதொரு உலகளாவிய தொற்றை இதுவரை பலர் கண்டதே இல்லை என்று கூட சொல்லலாம். அதுவும் இந்தியாவில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டும் 2020 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டும் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக இரண்டு மாத கட்டுப்பாடுகளுக்கு பின் மத்திய, மாநில சுகாதாரத்துறை மேற்கொண்ட பலகட்ட நடவடிக்கைகளுக்கு பின் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்பின்னரே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் அனைத்து நாடுகளும் தனிநபர்களும் இத்தொற்று நோய் பரவலினால் பல பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2022ம் ஆண்டில் இந்த ஆண்டில்தான் ஓரளவு தொழி்ல்துறையானது வளர்ச்சியடைய துவங்கியுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளின் பாதிப்பு பலருக்கு இன்று வரை ஓயவில்லை. கொரோனா குடும்ப நபருக்கு தொற்று ஏற்பட்டாலே அருகில் சென்று கவனிக்க முடியாத நிலை? இறந்தால் சொல்லவே தேவையில்லை முகத்தைப்பார்க்க கூட முடியாது-? .பகவானே இது என்ன சோதனை? என பலரும் பரிதவித்து போயினர். நன்கு நடமாடியவர்களை அடுத்த ஒரு சில நாட்களில் காண முடியவில்லை... மறைவு என்ற செய்தி வரும்போது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. பல இழப்புகளை பலரும் சந்திக்க நேர்ந்தது. உழைப்பை நம்பி கடன் வாங்கியவர்களுக்கு உழைக்க முடியாததால் கடும் சிக்கல் ஏற்பட்டது. இதுபோல் பல பிரச்னைகளை உருவாக்கிய கொடிய நோய் கொரோனா இந்தியாவில் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. இருந்தாலும் நாம் உஷாராகவே இருக்க வேண்டும் என பலரும் சொல்கின்றனர். காரணம் அவர்கள் பட்ட அனுபவம் பேசுகிறது...

corena ended over in india medical team announced

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் போடப்பட்டது.(பைல்படம்)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது கடந்த 27 நாட்களாக ஒரு நாளுக்கு மூவாயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. உயிரிழப்புகளுக்கும் 10 க்கும் குறைவாகவே உள்ளது. இதுகுறித்து தற்போதைய நிலையைக்கொண்டு டில்லியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தரப்பில் தெரிவித்ததாவது,


கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது லாக்டவுனில் வெறிச்சோடிய ரோடுகள்...(பைல்படம்)

இந்தியாவில் தற்பாது ப்ளுகாய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் அறிகுறியும் கொரோனா அறிகுறி போலவே உள்ளது. ப்ளூ காய்ச்சலினால் பாதிப்போரின் எண்ணிக்கையானது உயர்ந்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தே காணப்படுகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு குறைவான அறிகுறிகளே தென்படுகிறது.

முன்பெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நிலைமை இல்லை. அதேநேரம் முதியோர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.


கொரோனா பரவல் தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் பொது வழியில் வைக்கப்பட்ட விழிப்புணர்வு (பைல்படம்)

இந்தியாவில் கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட துவங்கிவிட்டோம். தொற்றுபரவலானது முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் வைரஸ் உருமாற்றம் அடைவது தெரிந்துகொண்டேயிருக்கும். இதனால் ஒரு அச்சமும் இல்லை. இதன் தீவிர தன்மை குறித்த ஆராய்ச்சிகள் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 7:33 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!