/* */

'நான் பார்வதி அவதாரம், சிவனை மட்டுமே மணப்பேன்' : எல்லையை விட்டு வர மறுக்கும் பெண்

woman refused to leave china border-பார்வதி அவதாரம் என கூறி சீன எல்லையை விட்டு வர மறுக்கும் பெண்ணை அழைத்து வர ஒரு பெரிய குழுவை அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

நான் பார்வதி அவதாரம், சிவனை மட்டுமே மணப்பேன் : எல்லையை விட்டு வர மறுக்கும் பெண்
X

woman refused to leave china border-இந்திய - சீன எல்லைபகுதியான நாபிதாங்கில் ஒரு பெண் தன்னை பார்வதி தேவியின் அவதாரம் என்று கற்பனைசெய்துகொண்டு அங்கிருந்து வெளியேற மறுக்கிறார். யாரும் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்தப்பெண் மிரட்டுவதாக கூறப்படுகிறது.

அந்தப்பெண் லக்னோவைச் சேர்ந்தவர். அவர் பெயர் ஹர்மிந்தர் கவுர். அவர் தன்னை பார்வதி தேவியின் அவதாரம் என்று சொல்வதுடன், கைலாச மலையில் வசிக்கும் சிவபெருமானை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி வருகிறார். அவர் இருக்கும் பகுதி யாரும் உள்ளே நுழையக்கூடாத தடைசெய்யப்பட்ட நாபிதாங் பகுதியாகும். அந்தப்பெண் அங்கிருந்து வெளியேற மறுத்துவருகிறார். இந்த செய்தியை பிடிஐ நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. ஒருவேளை யாராவது தன்னை அந்த இடத்தில் இருந்து அகற்ற நினைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அதனால் அப்பெண்ணை அகற்றச் சென்ற காவலர்கள் ஒன்றும் செய்யமுடியாமல் திரும்பிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பித்தோராகர் எஸ்.பி லோகேந்திர சிங் கூறும்போது,

woman refused to leave china border-பார்வதியின் அவதாரம் என்று கூறும் ஹர்மிந்தர் கவுர் பார்ப்பதற்கு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரிகிறார். அவரை தார்ச்சுலாவுக்குக் அழைத்து வருவதற்கு ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளோம். அப்பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

15 நாட்களுக்கு பர்மிட் பெற்று அந்தப்பெண் தன் தாயுடன் கஞ்சி பகுதிக்கு வந்துள்ளார். கைலாஷ்-மானசரோவர் செல்லும் வழியில் கஞ்சி உள்ளது. ஆனால் அந்த பர்மிட், மே 25-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் அவர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுக்கிறார்.

இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் என அடங்கிய மூன்று பேர் கொண்ட போலீஸ் குழு அந்த பெண்ணை அழைத்து வர முடியாமல் திரும்பியுள்ளது. மருத்துவ பணியாளர்கள் உட்பட 12 பேர் கொண்ட பெரிய போலீஸ் குழுவை அனுப்பி அப்பெண்ணை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Updated On: 5 Jun 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை