/* */

china's growth in asia-ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கு அச்சுறுத்தலா..?

china's growth in asia-ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியுமா? தெரிஞ்சுக்கங்க.

HIGHLIGHTS

chinas growth in asia-ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கு அச்சுறுத்தலா..?
X

china's growth in asia-இந்திய-சீன உறவு (கோப்பு படம்)

ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்று பலரும் சிந்திக்கத்தொடங்கியுள்ளனர். உண்மையில் அப்படியான தோற்றம் இருந்தாலும் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கிவிடுமா..? கொஞ்சம் அலசிப்பார்ப்போமா..?


சீனா வளர்ந்து வருகின்ற வேகம் மற்றும் அதன் எழுச்சி இந்தியாவுக்கு மட்டுமல்ல ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது. ஏனெனில், தற்போது ஆசியாவின் வலிமையான சக்தியாக விளங்குவது அமெரிக்கா. சீனாவின் அசுர வளர்ச்சி விரைவில் ஆசியாவின் முக்கிய சக்தி மையமாக விளங்கும் அமெரிக்காவை விரைவில் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

china's growth in asia

இந்தியாவும் வளர்கிறது

ஆனால், சீனாவின் இந்த எழுச்சி இந்தியாவை எதுவும் செய்யமுடியும் என்பதற்கான அர்த்தம் அல்ல. ஏனெனில், சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்து வருகிறது. இப்போது இந்தியாவின் பொருளாதாரம் சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை உலக நாடுகளும் கவனிக்கின்றன. எனில் சீனாவும் கவனித்து வருகிறது.

தற்போது இந்தியா தனது பாதுகாப்புக்காக எடுத்துவரும் நடவடிக்கைகள் சிறப்புக்குரியனவாக இருக்கிறது. இந்திய அரசு இந்திய ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவதிலும், உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும் விழிப்புடன் செயல்பட்டுவருகிறது.

இப்போது போர் வந்தாலும், சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்துகூட போரில் இந்தியாவை சீனாவால் கைப்பற்ற முடியாது என்பது மட்டும் திண்ணம்.


தக்க பதிலடி

ஏனெனில், இந்தியா இப்போது பலமுனைகளில் சீனாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. பல வழிகளில் சீனாவை எதிர்க்கவும் தொடங்கியுள்ளது. இந்தியா சீனாவை நேருக்கு நேர் நின்று சந்திக்கிறது. ஆனால், இந்தியாவின் இந்த திறன் அல்லது இந்தியாவின் இந்த கொள்கை, சீனாவை எதிர்கொள்ளும் இந்த முறைமையை இனி எப்போதும் தொடரும் என்றால் மட்டுமே அது பயனுள்ளதாக அமையும்.

முதலையிடம் காலைக் கொடுத்த மனிதன் நிலை

இந்தியா சீனாவுடன் கொண்டுள்ள இந்த அணுகுமுறை சீனாவுக்கு இந்தியா என்கிற முதலையிடம் காலை கொடுத்துக்கொண்ட சீனா மனிதன் போல. வணிகம் என்பதே உலக ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. அதற்கு இந்தியா சிறந்த சர்வதேச சந்தை. ஆகவே சீனா இந்தியாவின் சந்தை வாய்ப்பை இழக்க விரும்பாது. மேற்கத்திய நாடுகளிடம் செய்யும் வணிக சதவீதத்தை ஒப்பிடும்போது இந்திய வணிக சந்தையின் சதவீதம் அதிகம்.


ஒரு சிறிய வணிக கண்ணோட்டம்

பிப்ரவரி 2023 இல், சீனா $7.12பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. $1.45பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதன் விளைவாக $5.67பில்லியன் நேர்மறையான வர்த்தக இருப்பு இருந்தது. ஆனால்,

ஆனால், இதே காலகட்டத்தில் அதாவது 2022 பிப்ரவரி மாத ஏற்றுமதி இதைவிட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

china's growth in asia

மேற்கூறப்பட்டுள்ள கருத்தில் எந்த சூழ்நிலையிலும் சீனாவின் எதிர்ப்புக் கூட்டணியில் இந்தியா ஒரு அங்கமாக மாறவேண்டும் என்பது பொருள் அல்ல. பொதுவாகவே, ஒரு கடுமையான அச்சுறுத்தல் இல்லாவிட்டால் எந்த நாடும் அதன் மிகப்பெரிய வணிகக் கூட்டாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காது. அதே நிலைதான் சீனாவுக்கும்.

மிகப்பெரிய பொருளாதார சந்தை

இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையை சீனா புறக்கணித்துவிட முடியாது. இந்திய சந்தையை கைப்பற்ற பெரிய ஜாம்பவான்களான சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டுள்ளன. இதை சீனா அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா என்ன? நமக்கான எல்லைப்பிரச்னையில் சின்னச்சின்ன சீண்டல்களை மட்டுமே அதன் எதிர்ப்புகளாக சீனா காட்டுமே தவிர இந்தியா மீது போர்த் தொடுக்கும் அளவுக்கெல்லாம் அச்சுறுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.

china's growth in asia


ராஜதந்திர நடவடிக்கை

அதனால்தான் அந்த சூழலை தற்போதைய அரசு சாதுர்யமாக கையாண்டுவருகிறது. அதற்காக சீனாவுக்கு எதிராக பெரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தத் தேவையில்லை. எதிர்வினை ஆற்றினாலே போதுமானது. அது தென்சீனக் கடலில் நமது இருப்பை சீனாவுக்கு காட்டுவது. சில துணிச்சலான முடிவுகள் மட்டுமே இந்திய பாதுகாப்பினை உறுதிப்படுத்தமுடியும். இதனால் இந்தியா இப்பகுதியில் தனது கடற்படை இருப்பை வலுப்படுத்தவும், வியட்நாம் போன்ற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தவும் இந்தியா முனைப்புக்காட்டி வருகிறது. இதெல்லாமே சீனாவுக்கு இந்தியா மறைமுகமாக கொடுக்கும் பதிலடியாகும்.

சீன வணிக ஆப்களை இந்தியா தடை செய்தது மற்றும் சில பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்தது போன்றவை சீனாவுக்கு இந்திய கொடுத்த நேரடி பதிலாகும். 'என்னைச் சீண்டினால் நானும் சும்மா இருக்கமாட்டேன்' என்ற தந்திர பதிலடி.

இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது இந்நேரம் நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆமாம். ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி, இந்தியாவுக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க முடியாது. ஏனெனில் இந்தியாவும் வளர்கிறது.

Updated On: 6 May 2023 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு