சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு?
சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தாக அஞ்சப்படுகிறது.
HIGHLIGHTS

விபத்து நடந்த இடத்தில் நடக்கும் மீட்பு பணிகள்.
ஹவுராவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஹவுராவிற்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுராவில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த ரயில் இன்று இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடம் அருகே வந்தபோது அந்த ரயிலின் மீது ஒரு சரக்கு ரயில் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினால் பயணிகள் அய்யோ அம்மா என அலறினார்கள். இந்த விபத்தில் இருபதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு ஒடிசா மாநில உயர் அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கு காரணம் என்ன? சரக்கு ரயில் டிரைவர் காரணமா? அல்லது சிக்னல் கோளாறு காரணமாக என்பது பற்றி உயர் மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.