/* */

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் நள்ளிரவில் கைது

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது

HIGHLIGHTS

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் நள்ளிரவில் கைது
X

எம்.பி கார்த்தி சிதம்பரம்

முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை நடத்தினர்.

சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பது தொடர்பாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.

டெல்லி, மும்பை ,சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் இதில் எதுவும் சிக்கவில்லை என்று ப. சிதம்பரம் விளக்கமளித்தார்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை நள்ளிரவில் சிபிஐ கைது செய்தது

Updated On: 18 May 2022 1:23 PM GMT

Related News