/* */

By election2023 result-இடைத்தேர்தல் முடிவுகள் : 'இந்தியா' கூட்டணிக்கு சாதக முடிவு..!

6 மாநிலங்களில் நடந்த 7 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது போல இருக்கிறது.

HIGHLIGHTS

By election2023 result-இடைத்தேர்தல் முடிவுகள் :  இந்தியா கூட்டணிக்கு  சாதக முடிவு..!
X

By election2023-இடைத்தேர்தல் 2023(கோப்பு படம்))

By election2023 result

கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணிக்கும் - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இடையில் நடக்கும் முதல் தேர்தல் இது ஆகும். இதன் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் எதிர்பார்க்காத 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. 2 இடங்களில் பாஜக அல்லாத கூட்டணி வென்றுள்ளது. 3 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி, ஜார்கண்டின் டும்ரி, தன்பூர் திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் மற்றும் உத்தரகாண்டின் பாகேஷ்வரிலும் தேர்தல் நடந்தது. இந்த 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி வேட்பாளர் களமிறக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளிவிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளியில் கட்சிகள் தனித் தனியாக போட்டி. இங்கே இந்திய கூட்டணி ஒன்றாக களமிறங்காமல் ஒரு சில கட்சிகள் மட்டும் தனித் தனியாக இறங்கின. இங்கே நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகளை தற்போது பார்க்கலாம்.

கோசி இடைத்தேர்தல், உத்தரப்பிரதேசம் -இந்தியா கூட்டணி வெற்றி:

பாஜகவில் இணைந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ தாரா சிங் சவுகான் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இங்கே இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பா.ஜ.க, சார்பில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கே பிரசாரத்துக்கு தலைமை தாங்கினார்.

பாஜகவின் தாரா சிங் சவுகானை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) வேட்பாளர் சுதாகர் சிங் களமிறங்கினார். இங்கே சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரவு. இந்திய கூட்டணி முதல்முறையாக அங்கே ஒன்றாக போட்டியிட்டது. கோசி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் இங்கே சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் இங்கே முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிப்பது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இங்கே 1,24,427 வாக்குகள் பெற்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றார். ' இவர் கிட்டத்தட்ட 33500 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகானை விட 42,759 வாக்குகள் அதிகம் பெறுள்ளார். சவுகான் 81, 668 வாக்குகள் பெற்றார். இதனால் இங்கே இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. டும்ரி, ஜார்கண்ட் இந்தியா கூட்டணி வெற்றி: 2019 இல் JMM க்காக வெற்றி பெற்ற மாநில அமைச்சரவை அமைச்சர் ஜெகநாத் மஹ்தோவின் மரணத்திற்குப் பிறகு டும்ரி சட்டமன்றத் தொகுதி காலியானது.

தும்ரியில் இந்தியா கூட்டணி வெற்றி

பாஜக ஆதரவுடன் ஏஜேஎஸ்யு சார்பில் போட்டியிடும் யசோதா தேவியை என்டிஏ வேட்பாளராக நிறுத்தியது. ஜகந்நாத் மஹ்தோவின் மனைவி பெபி தேவியை இந்தியா கூட்டணி களமிறக்கியது. இந்த நிலையில்தான் ஜார்க்கண்டில் தும்ரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ்,ராஷ்டிய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவித்திருந்தது. இதன் மூலம் இந்தியா கூட்டணி அங்கே வென்றுள்ளது. இந்தியா கூட்டணி வேட்பாளர் பெபி தேவி 100317 பெற்று 17153 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இது போக புதுப்பள்ளியில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அங்கே டெபாசிட் பெறுவதே சந்தேகம் ஆகி உள்ளது.

புதுப்பள்ளி கேரளா காங்கிரஸ் வெற்றி :

கேரள முன்னாள் முதல்வர் மறைந்த உம்மன் சாண்டி 53 ஆண்டுகளாக இத்தொகுதியை வென்று சாதனை படைத்தது வந்தார். இங்கே தற்போது அவர் மகன் வென்றுள்ளார். சாண்டி இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலமானார். தற்போதைய இடைத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணியின் சாண்டி உம்மன் (உம்மன் சாண்டியின் மகன்), சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணியின் ஜாக் சி தாமஸ் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏவின் லிகின்லால் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. காங்கிரஸ் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அதே வேளையில், 1970 ஆம் ஆண்டு உம்மன் சாண்டி சகாப்தம் தொடங்குவதற்கு முன்பு கட்சி வசம் இருந்த இடத்தைக் கைப்பற்றும் என்று சிபிஐ (எம்) நம்பியது.

இந்தியா கூட்டணி இங்கே பிரிந்து போட்டியிட்டது. இங்கே தற்போது காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உமன் 80144 வாக்குகள் பெற்று வென்றார். இடதுசாரி கூட்டணி சிபிஎம் வேட்பாளர் ஜெய்க் தமாஸ் 42425 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாஜக வேட்பாளர் லிகின் லால் வெறும் 6558 வாக்குகள் வென்று டெபாசிட் கூட பெற முடியாமல் தோல்வி அடைந்தார்.

துப்குரி இடைத்தேர்தல், மேற்கு வங்காளம் -

திரிணாமுல் வெற்றி: வடக்கு வங்காளத்தில் உள்ள துப்குரி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் டிஎம்சி , பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவளிக்கும் சிபிஐ(எம்) இடையே மும்முனைப் போட்டி நிலவியது. கடந்த 2021 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, அதற்கு முன் 2016ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சென்ற தொகுதி ஆகும் இது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக எம்எல்ஏ பிஷு பதா ரே காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது. துப்குரி, ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பணியின் போது தனது உயிரைக் கொடுத்த சிஆர்பிஎஃப் ஜவான் ஜெகன்நாத் ராயின் மனைவி தபசி ராய்யை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.

முன்னாள் டிஎம்சி எம்எல்ஏ மிதாலி ராய் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் திரிணாமுல் கட்சி முறையான திட்டத்துடன் இங்கே தேர்தலைச் சந்தித்தது. பாஜக வேட்பாளருக்கு எதிராக, டிஎம்சி கட்சி பேராசிரியரான நிர்மல் சந்திர ராயை அந்த இடத்தில் நிறுத்தி உள்ளது. சிபிஐ (எம்) வேட்பாளர் ஈஸ்வர் சந்திர ராய்க்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

இங்கே தற்போது திரிணாமூல் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 97613 வாக்குகள் பெற்று இங்கே வென்றுள்ளார். பாஜக வேட்பாளர் தப்ஸி ராய் 93304 பெற்று -4309 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். தன்பூர் மற்றும் போக்ஸாநகர்,

திரிபுரா பாஜக வெற்றி:

திரிபுராவில் உள்ள தன்பூர் மற்றும் போக்ஸாநகர் இடைத்தேர்தல்களில் சிபிஐ (எம்) மற்றும் ஆளும் பாஜக இடையே நேருக்கு நேர் போட்டி ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸும், திப்ரா மோதாவும் இரண்டு இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை, இது சிபிஐ (எம்) க்கு சாதகமாக மாறி இருந்தது. அதனால் இரண்டிலும் சிபிஎம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

தான் வென்ற லோக்சபா சீட்டை தக்க வைப்பதற்காக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான பிரதிமா பௌமிக் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தன்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. ஒரு காலத்தில் இடதுசாரிகளின் வலுவான கோட்டையாக இருந்தது தன்பூர்.

ஆனால் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக பாஜக வசம் செல்ல தொடங்கி உள்ளது. பாஜகவின் பிந்து தேப்நாத் மற்றும் சிபிஐ (எம்) இன் கவுஷிக் சந்திரா ஆகியோருக்கு இடையே இன்று பலப்பரீட்சையாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

1972ல் இருந்தே இது சிபிஎம் தொகுதி ஆகும். இங்கே 1998ல் இருந்து 2018 வரை மாணிக் சர்க்கார்தான் எம்எல்ஏவாக இருந்தார். தொடர்ந்து இங்கே 5 முறை வென்றார். ஆனால் இப்போது இந்த தொகுதியில் பாஜகவின் பிந்து தேப்நாத் வென்றுள்ளார். 30017 வாக்குகள் வென்று பாஜகவின் பிந்து தேப்நாத் வென்றுள்ளார். சிபிஎம் வேட்பாளர் கவுஷிக் சந்திரா 11146 பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

போக்சாநகர் பாஜக வெற்றி:

திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் போக்சநகர் ஒன்றாகும்.

இது சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ளது. மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இங்கே சிறுபான்மையினர் அதிகம் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ (எம்) கட்சியிடம் தோல்வியடைந்த தஃபஜல் ஹுசைனை போக்ஸாநகரில் பாஜக மீண்டும் களமிறக்கிக்கி உள்ளது. சிபிஐ (எம்) கட்சி சார்பாக இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த சாம்சன் ஹக்கின் மகன் மிசான் ஹுசைன் இங்கே வேட்பாளராக களமிறங்கி இருந்தார்.சாம்சன் ஹக்கின் மரணம் காரணமாகவே இங்கே இடைத்தேர்தல் நடந்தது.

இது 2003- 2023 வரை சிபிஎம் தொகுதி ஆகும். இந்த நிலையில் தற்போது நடந்த தேர்தலில் பாஜகவின் தஃபஜல் ஹுசைன் வென்றுள்ளார். 34146 வாக்குகள் பெற்று அவர் வென்றுள்ளார். சிபிஎம் வேட்பாளர் மிசான் ஹுசைன் 3909 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் சிபிஎம் நிறுத்திய இஸ்லாமிய வேட்பாளரை எதிர்த்து பாஜக நிறுத்திய இஸ்லாமியர் வேட்பாளர் வாக்குகளை அள்ளி கிட்டத்தட்ட 31 ஆயிரம் வாக்குகள்; வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

பாகேஷ்வர், உத்தரகண்ட் பாஜக வெற்றி:

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முக்கிய போட்டி நிலவியது. இங்கே தற்போது பாஜக வென்றுள்ளது.

2023 ஏப்ரலில் பாஜக எம்எல்ஏவும், அமைச்சருமான சந்தன் ராம் தாஸ் இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பசந்த் குமாரை எதிர்த்து மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி பார்வதி தாஸை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.பார்வதி தாஸ், பசந்த் குமார் ஆகியோரைத் தவிர, சமாஜ்வாதி கட்சியின் பகவதி பிரசாத், உத்தரகண்ட் கிராந்தி தளம் சார்பில் அர்ஜுன் தேவ், உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் பகவத் கோஹ்லி ஆகியோரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். பார்வதி தாஸ் இங்கே பாஜக சார்பாக 33247 வாக்குகள் பெற்று வென்றார். காங்கிரசின் பசந்த் குமார் 30842 வாக்குகள் பெற்று வெறும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

ஆறு மாநிலங்களில் நடந்த ஏழு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 2 இடங்களிலும், பாஜ அல்லாத கூட்டணி 2 இடங்களிலும், பாஜ 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், இந்தியா கூட்டணிக்கு இந்த வெற்றி 2024ம் ஆண்டு தேர்தலிலும் தொடருமா என்பதுதான்.அதற்குள் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை நாம் கணித்துவிடமுடியாது. பாஜகவும் 2024ம் ஆண்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அவர்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Sep 2023 5:01 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  2. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  5. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  6. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  7. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  8. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  9. காஞ்சிபுரம்
    ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்...!
  10. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...