/* */

வருமானவரி விகிதத்தில் மாற்றமில்லை: வரிவிலக்கு வரம்பு ரூ.2.50 லட்சமே தொடரும்

தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமில்லை. தனி நபர் வரி விலக்கிற்கான உச்சவரம்பு எந்த மாற்றமின்றி ரூ.2.50 லட்சம் என்று தொடரும்.

HIGHLIGHTS

வருமானவரி விகிதத்தில் மாற்றமில்லை: வரிவிலக்கு வரம்பு ரூ.2.50 லட்சமே தொடரும்
X

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • அரசின் மூலதன செலவுகளுக்கு ரூ.7. 5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டவிட 35.4% அதிகம்.
  • நாட்டில் 2023, ஆம் ஆண்டில் டிஜிட்டல் கரன்சி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும்.
  • மாநிலங்களுக்கு உதவ ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடன்; மூன்று ஆண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
  • திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, தற்போதுள்ள ஓராண்க்கு பதில், இரு ஆண்டுகள் என கூடுதல் அவகாசம்.
  • கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% ஆக குறைப்பு
  • அரசின் நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் 6.4% ஆக குறையும்.
  • எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் பி.எப். வரிச்சலுகை.
  • பிட் காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி மூலம் பெறப்படும் வருமானத்துக்கு 30% வருமான வரி.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மேலும் ஓராண்டுக்கு ஊக்கத்தொகை நீட்டிப்பு.
  • வரும் ஆண்டில் அரசின் செலவு: ரூ.39.5 லட்சம் கோடி; வரவு - ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும்.
  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி
  • இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்
  • பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்
  • நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% அளவில் இருக்கும்
  • வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைப்பு; குடைகள் மீதான வரி 20% உயர்வு
  • மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5%-ஆக குறைக்க முடிவு
  • 2022 ஜனவரி மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாகும், இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதிகம்
  • பெரும் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி (Surcharge) 12-ல் இருந்து 7% ஆக குறைப்பு
  • தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமில்லை. தனி நபர் வரி விலக்கிற்கான உச்சவரம்பு எந்த மாற்றமின்றி ரூ.2.50 லட்சம் என்று தொடரும். மூத்த குடிமக்களுக்கு உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் என்ற வரம்பு தொடரும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையை 1.32மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார்.
Updated On: 3 Feb 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு