/* */

எதிர்க்கட்சிகள் திட்டுவது எனக்கு ஊட்டச்சத்து ஆந்திராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

andhra state visit pm modi speech ஆந்திரா தெலுங்கானாவில் நடந்த பாஜ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

HIGHLIGHTS

எதிர்க்கட்சிகள் திட்டுவது எனக்கு ஊட்டச்சத்து  ஆந்திராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
X

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பாஜ கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி (கோப்புபடம்)

andhra state visit pm modi speech


தெலுங்கானா மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்கிறார் அம்மாநில கவர்னர் தமிழிசை செளந்திரராஜன்(கோப்பு படம்)

andhra state visit pm modi speech

இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்த என்னை கடந்த 22 ஆண்டுகளாகதினமும் திட்டுகின்றனர். ஒரு நாளைக்கு நான் 2 கிலோமுதல் 3 கிலோ வரை திட்டுகளைப் பெறுகிறேன். இந்த திட்டுகள் தான் எனக்கு ஊட்டச்சத்தாக அமைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்தே எனக்கு மக்கள் சேவை செய்ய போதுமான சக்தியை அளிப்பதாக தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சியானது நடந்து வருகிறது. இவர் தொடர்ந்து மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்காமல் மோதல் போக்கினைக் கடைப்பிடித்துவருகிறார். பிரதமர் மோடியை தொடர்ந்து சந்திரசேகரராவ் கட்சி சார்பில் விமர்சனம் செய்தும் வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி அங்கு சென்றார். அவரை முதல்வர் சந்திரசேகரராவ் விமானநிலையத்தில் வரவேற்காமல் புறக்கணித்தார். இருந்தபோதிலும் பிரதமர் அங்குள்ள பேகும்பட் என்ற இடத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது,

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு மோடியை திட்டுவதுதான் முதல் வேலையாக உள்ளது. இதற்காகவே அவர்களுடைய சக்தியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் நம் கண் முன் மக்கள் குறித்த சேவை மட்டுமே மையமாக இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு நாட்களாக நான் 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். அதாவது தமிழகம், கர்நாடகம் இப்போது ஆந்திரா என சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். உங்களுக்கு சோர்வே ஏற்படாதா? என என்னிடம் பலர் கேட்கின்றனர். நான் நாளொன்றுக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து 2-3 கிலோதிட்டுகளைப் பெறுகிறேன். இந்த விமர்சனங்களை திட்டுகளை, வசவுகளை சத்தாக மாற்றும் சக்தியை எனக்கு இறைவன் வழங்கியுள்ளார். எனவே இந்த சக்தியேஎனக்கு மக்களுக்கு சேவை செய்யும் ஆற்றலை வழங்குவதாக நினைப்பதால் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை நான் எதிர்க்கட்சிகளிடம் இருந்து தொடர்ந்து பெற்றுவருவதாகக் குறிப்பிட்டார்.

எனவே என்னை யாரும் விமர்சிக்கும் பட்சத்தில் நீங்கள் தயவுசெய்து கவலைப் படவேண்டாம். அவர்கள் அகராதியில் உள்ள வார்த்தைகள் அனைத்தையும் உபயோகித்து திட்டி திட்டி சோர்ந்தே போய்விட்டனர். நீங்கள் சிரித்துக்கொண்டு உங்கள் வேலையை பார்க்கவும். எதிர்க்கட்சிகளின் திட்டுகளால் பாஜ மென்மேலும் வளர்ச்சியடைந்துகொண்டுதானிருக்கிறது. பாஜவின் சின்னமான தாமரையும்வளர்ந்து வருகிறது. இதனை மகிழ்ச்சியுடன் நாம் ஏற்றுக்கொள்வோம்.

என்னை, கட்சியைத் திட்டுவதை நான் பொறுத்துக்கொண்டு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தெலுங்கானா மக்களை திட்டுவதை நான் ஏற்றுக்கொள்ளவேமாட்டேன். இதற்கான பதிலடி வேறுவிதத்தில் நிச்சயம் கிடைக்கும்.

andhra state visit pm modi speechஇந்த மாநிலத்தினைப் பொறுத்தவரை ஒரு குடும்பம் மட்டுமே வளர்ச்சியைப் பெற்று வருகிறது. ஆனால் அவர்கள் மற்ற குடும்பங்களும் வளர்ச்சியடைய அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.ஆனால் பாஜ மற்ற குடும்பங்களும் வளரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகிறது.இம்மாநிலத்தில் நடந்த இரண்டு இடைத்தேர்தல்களின் முடிவுகள் பாஜவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. எனவே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகிவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது என பேசினார்.

உலகமே எதிர்பார்க்கிறது

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வருகிறார். இங்கு பல வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.உலக நாடுகள் அனைத்துமே பல கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. சில நாடுகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் எரிசக்திக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அனைத்து உலக நாடுகளுமே பொருளாதார வீழ்ச்சி குறித்து மிகுந்த கவலையில்உள்ளன. இந்த நேரத்தில் உலக நாடுகள் நம் நாட்டினை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றன.புதிய வளர்ச்சி திட்டங்கள் அனைத்திலும் பாரத நாடானது புதிய வரலாற்றினையும் , சகாப்தத்தினையும் படைத்து வருகிறோம். எனவே பல உச்சங்களை பல துறைகளில் நாம் தொட்டுள்ளோம்.

நாட்டுமக்களின் நம்பிக்கையை எதிர்பார்ப்பை உறுதி செய்ய நாம் கடுமையாக உழைப்பதால்தான் இது சாத்தியமானது. எனவே எந்த ஒரு முடிவாக கொள்கையாக இருந்தாலும் அது மக்கள் நலன் சார்ந்ததாக மையமாக இருக்கவேண்டும் என அவர் பேசினார்.

Updated On: 13 Nov 2022 9:42 AM GMT

Related News