/* */

அமர்நாத் புனித யாத்திரை இன்று முதல் துவக்கம்

Amarnath Temple - ட்ரோன் மூலம் கண்காணிப்பு மற்றும் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் முறைகளும் பின்பற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HIGHLIGHTS

அமர்நாத் புனித யாத்திரை இன்று முதல் துவக்கம்
X

அமர்நாத் பனிலிங்கம் (பைல் படம்).

Amarnath Temple - இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் புனித யாத்திரை இன்று தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக இந்த யாத்திரையில் பங்கேற்கும் முதல் குழுவின் பயணத்தை நேற்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து கவர்னர் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை நிகழ்ச்சியில் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தெற்கு காஷ்மீரின் குல்காம், சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் ஆகிய நான்கு மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு மற்றும் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் முறைகளும் பின்பற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல் அணுகுமுறை காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Jun 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்