/* */

தமிழிலும் பொறியியல் பாடங்கள்-அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

பொறியியல் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழிலும் பொறியியல் பாடங்கள்-அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி
X

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) 

தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி.

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) அனுமதி அளித்துள்ளது. இதனால், இனி தமிழிலும் பொறியியல் பாடங்களைப் படிக்கலாம்.

கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம். உள்ளிட்ட 7 மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.இதன் காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

மேலும், 11 இந்திய மொழிகளிலும் பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 May 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...