/* */

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பிரபல வேளாண் விஞ்ஞானி இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98,

HIGHLIGHTS

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை  எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்
X

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98,

எம்.எஸ்.சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925 இல், கும்பகோணம் டாக்டர் எம்.கே.சாம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, அவர் வேளாண் அறிவியல் மற்றும் மரபியல் படிப்பைத் தொடர்ந்தார்.

இந்தியாவில் பசுமைப் புரட்சி 1960களில் தொடங்கியது. இந்த நேரத்தில், அதிக மகசூல் தரும் வகை விதைகள், இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற புதுமைகளின் வேலைவாய்ப்பு மூலம் இந்தியாவின் விவசாயம் ஒரு நவீன தொழில்துறை அமைப்பாக மாற்றி அமைத்தார்.

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை எம்.எஸ். சுவாமிநாதன் வகித்துள்ளார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை எம்.எஸ். சுவாமிநாதன் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர் இன்று காலை சென்னையில் காலாமானார் அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 3 Oct 2023 4:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...