/* */

2025 ம் ஆண்டு முதல் லாரி டிரைவர்களுக்கு ஏ.சி. கட்டாயமாகிறது :மத்திய அமைச்சர் தகவல்

a.c. facilities compulsory from 2025 in india இந்தியாவிலுள்ள அனைத்து வகையான லாரிகளிலும் வரும் 2025 ம் ஆண்டு முதல் லாரிடிரைவர்களுக்கு ஏ.சி. கட்டாயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

2025 ம் ஆண்டு முதல் லாரி டிரைவர்களுக்கு   ஏ.சி. கட்டாயமாகிறது :மத்திய அமைச்சர் தகவல்
X

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  (கோப்பு படம்)

a.c. facilities compulsory from 2025 in india


a.c. facilities compulsory from 2025 in india

இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து லாரிகளிலும் வரும் 2025 ம் ஆண்டு முதல் லாரி டிரைவர்களுக்கு தேவையான ஏ.சி. வசதியை செய்து கொடுப்பது கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தியாவில் சரக்கு போக்குவரத்தானது பெரும்பாலும் லாரிகளின் மூலமாகவே நடக்கிறது. இதனால் தொலைதுாரங்களுக்கு இரண்டு டிரைவர்கள் போட்டு டாரஸ் லாரிகள் மற்றும் சாதாரண என்.பி பர்மிட்டுகள் கொண்ட லாரிகள் அதிக அளவில் இயங்கிவருகின்றன. ஆனால் லாரி டிரைவர்களின் ஆரோக்யத்தை அதாவது வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு குளிர்சாதன வசதியை லாரிகளில் ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

இந்நிலையில் டில்லியில் மகிந்திரா லாஜிஸ்டிக் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது,

a.c. facilities compulsory from 2025 in india



a.c. facilities compulsory from 2025 in india

இந்தியாவில் பெரும்பாலான லாரிகள் தொலைதுாரங்களுக்கு பயணமாகின்றன. இதில் லாரி டிரைவர்களின் உடல்நலம் மிக மிக முக்கியம். எனவேதான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்புதான் வரும் 2025 ம் ஆண்டு முதல் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து வகையான லாரிகளிலும் ஏ.சி.வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கட்டாயம் என்ற பைலில் கையெழுத்திட்டுவிட்டுதான் நான் இங்கு வந்துள்ளேன் என பேசினார்.

மேலும் அவர் பேசும்போது,

நாட்டில் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனைக்குரிய விஷயமாகும். விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பது குறித்து லாரி டிரைவர்களுக்கு அவ்வப்போது சாலைவிதிமுறைகளை முறையாக பயிற்சி அளிப்பது மிக மிக முக்கியமானதாகும். மேலும் அவ்விதிகளை அவர்கள் உரிய முறையில் பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதும் அவசியம் .

சாலை இருக்கும் நிலைக்கு ஏற்ப அவர்கள் வாகனங்களை இயக்க கற்றுக்கொடுப்பது மிக முக்கியம். குறுகிய சாலைகளில் செல்லும் போது அதிக கவனத்துடன் பாதுகாப்பாக ஓட்டிச் செல்லவேண்டும். தொலைதுாரம் செல்லும் டிரைவர்கள் ஹைவேஸில் உள்ள ஓய்வு அறையில் போதிய நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.

a.c. facilities compulsory from 2025 in india



a.c. facilities compulsory from 2025 in india

மத்திய அரசானது லாரிடிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காகவே நேஷனல் ஹைவேசில் ஓய்வக வசதிகளை மேற்கொள்ள போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.நாட்டில் மொத்தம் 570 ரோட்டோர ஓய்வகங்கள் ஏற்படுத்த உள்ளன. இதில் 170 ஓய்வகங்களுக்கான பணிகளுக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டு பணிகள் துரித கதியில்நடந்து வருகிறது.

ஹைவேஸ்களில் 50 கி.மீ. தொலைவில் ஓய்வக அறைகளை நிர்மாணிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

அண்மையில் அமெரிக்காவிற்கு சென்ற முன்னாள் அகில இந்திய காங்.தலைவர் ராகுல் காந்தி வாஷிங்டனில் இருந்து நியூயார்க்கிற்கு லாரியில் பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா, மற்றும் இந்தியாவில் உள்ள லாரி டிரைவர்களின் நிலை குறித்து பேசினார்.

இந்தியாவில் வடிவமைக்கப்படும் லாரிகள் டிரைவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் வடிவமைக்கப்படும் லாரிகள் மற்றும் வாகனங்களில் டிரைவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்யம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் கட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Jun 2023 6:23 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...