/* */

உணவு, தண்ணீரின்றி 30 மணி நேரத்திற்கும் மேலாக மலை இடுக்கில் சிக்கித் தவிக்கும் இளைஞர்

குரும்பாச்சி மலை இடுக்கில் தவறிவிழுந்த இளைஞரை 30 மணி நேரத்திற்கும் மேலாக மீட்க முடியாமல் மீட்புப்படை தவித்து வருகிறது.

HIGHLIGHTS

உணவு, தண்ணீரின்றி 30 மணி நேரத்திற்கும் மேலாக மலை இடுக்கில் சிக்கித் தவிக்கும் இளைஞர்
X

கொக்கைன் போதையில் தவறி விழுந்து மலையில் சிக்கிய பாபு.

கேரள மாநிலம், மலம்புழா, சேரடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர். பாபு (23). இவர் நேற்று மதியம் (7ம் தேதி) மூன்று நண்பர்களுடன் செங்குத்தான குரும்பாச்சி மலையில் ஏறினார். அப்போது கொக்கைன் மபோதையில் பாபு தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயத்துடன் மலைப் பிளவில் சிக்கியுள்ளார். கொடிகள் மற்றும் குச்சிகளை பயன்படுத்தி நண்பர்கள் முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

பின்னர் நண்பர்கள் போலீசாருக்கும், அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே பாபுவும் தனது செல்போனை பயன்படுத்தி சிக்கிய இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

இப்பகுதியில் வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். செங்குத்தான மலையில் ஏறுவது ஆபத்தானது எனவும், இங்கு நிலச்சரிவில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாகவும் வனத்துறையினர் முன்பே எச்சரித்திருந்தனர்.

இளைஞரை மீட்கும் பணியில் மூன்று குழுக்களாக சென்ற வனத்துறை மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் செங்குத்தான பள்ளத்தாக்கு என்பதால், அங்கு செல்ல முடியவில்லை என தெரிவித்தனர். தற்போது பாபுவின் தொலைபேசியும் அணைக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணியாளர்களிடம் தனது செய்கை காட்டி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, இளைஞரை மீட்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் வந்தது. கடலோர காவல்படையினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தியும் பாபுவை மீட்க முடியவில்லை. மீட்புப் பணியாளர்கள் முதலில் பாபுவுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொண்டு வர முயன்றனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இந்த பகுதியில் ஹெலிகாப்டரால் பாபு சிக்கிய செங்குத்தான சரிவுக்கு அருகில் செல்லவோ அல்லது மலை உச்சியில் தரையிறங்கவோ முடியவில்லை. பாபுவை மீட்க முடியாமல் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. இதனால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

ஏர்லிஃப்ட்டிங் சாத்தியமில்லை என்றால், வேறு வழிகளைக் கையாள வேண்டும் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். மீட்புப் பணிகளுக்காக திருச்சூரிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த வீரர்கள் இன்று சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

கடந்த 30 மணி நேரமாகியும் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் இளைஞரை மீட்க முடியாததால் மீட்புப் பணியாளர்களும், அப்பகுதி மக்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனும் தலையிட்டு இளைஞர்களை மீட்க ராணுவத்தின் உதவியை நாடினார். அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் தெற்குப் படையின் லெப்டினன்ட் ஜெனரல் அருண், முதல்வர் அலுவலகத்திற்கு (சிஎம்ஓ) அறிவித்தார், விரைவில் பெங்களூரில் இருந்து ஒரு சிறப்புக் குழு தொடங்கும் என்று சிஎம்ஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையேறுதல் மற்றும் மீட்பு பணிகளில் நிபுணத்துவம் பெற்ற குழு, இரவில் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது சாத்தியமற்றது என்பதால் சாலை வழியாக பயணிக்கும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மற்றொரு குழு மாலையில் தமிழகத்தின் வெலிங்டனில் இருந்து பாலக்காடுக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் தவிர, விமானப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், பாரா கமாண்டோக்கள் பெங்களூரில் இருந்து சூலூருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு அங்கிருந்து சாலை வழியாக மலம்புழாவை சென்றடைவார்கள் என்றும் முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Feb 2022 5:17 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?