/* */

டாக்டர் பட்டம் வாங்கிய யுவன்சங்கர் ராஜா: சத்யபாமா பல்கலை., கவுரவம்

Yuvan Shankar - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி சத்யபாமா பல்கலை., கவுரவித்துள்ளது.

HIGHLIGHTS

டாக்டர் பட்டம் வாங்கிய யுவன்சங்கர் ராஜா: சத்யபாமா பல்கலை., கவுரவம்
X

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

Yuvan Shankar -தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சத்யபாமா பல்கலைக் கழகம் கவுரவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்து வருபவர், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. 16 வயதிலேயே திரையுலகில் நுழைந்த யுவனுக்கு தற்போது 42 வயது ஆகிறது.

இவர் சினிமாவில் நுழைந்த குறைந்த காலத்திலேயே தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனபல்வேறு மொழிகளில் இசையமைத்து இந்திய அளவில் அறியப்படும் சினிமா நட்சத்திரமாக யுவன் இருந்து வருகிறார்.

சினிமாவில் அறிமுக இசையமைப்பாளர் பலர் கலக்கி வந்தாலம், யுவன் சங்கர் ராஜா அளவுக்கு 25 ஆண்டுகள் தாக்கு பிடிப்பார்களாக என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு யுவன் தொடர்ச்சியான வெற்றிகளை திரைத்துறையில் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் திரைத்துறையில் யுவன் சங்கர் ராஜாவின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை சத்யபாமா பல்கலைக் கழகம் வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற யுவன் சங்கர் ராஜா, சிம்புவை பாராட்டி பேசினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏ.ஆர். ரகுமான் குறித்து பேசிய யுவன், தான் எப்போதும் ரஹ்மானின் ரசிகன் என்றும், அவர் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Sep 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...