சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு பணிகள்

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு பணிகள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு பணிகள்
X

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம் பரேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: தட்டச்சர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.15,300/-

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: அர்ச்சகர் (உட்கோயில்)

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.11,600/-

கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாட சாலையில் அர்ச்சகர் பணிக்கான ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: பரிசாரகர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.13,200/-

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: மேளம் செட்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.15,300/-

கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியிலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர்: காவலர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.11,600/-

6.பணியின் பெயர்: இரவு காவலர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.11,600/-

7. பணியின் பெயர்: திருவலகு

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.10,000/-

8. பணியின் பெயர்: கால் நடை பராமரிப்பாளர்

சம்பளம்: ரூ.11,600/-

9. பணியின் பெயர்: ஓதுவார்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.12,600/-

வயது வரம்பு: மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் 1.7.2021 தேதியின்படி 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

பணி எண் 5 முதல் 9 வரையுள்ள பணிகளுக்கான கல்வித் தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் ஓதுவார் பணிக்கு தேவாரப் பாடசாலையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பத்துடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 20.9.2021 சேர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

செயல் அலுவலர்,

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,

தங்கசாலை தெரு,

சென்னை-3.

Updated On: 3 Sep 2021 4:18 AM GMT

Related News