டெபுடி கலெக்டர் ஆவது தான் உங்கள் லட்சியமா? – இதோ TNPSC குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு உங்களுக்காக!

TNPSC group 1 exam official announcement - TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிறைவடைந்தவராகவும்‌, 39 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டெபுடி கலெக்டர் ஆவது தான் உங்கள் லட்சியமா? – இதோ TNPSC குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு உங்களுக்காக!
X

TNPSC group 1 exam official announcement - டெபுடி கலெக்டர் ஆவது தான் உங்கள் லட்சியமா? – இதோ TNPSC குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு உங்களுக்காக!

TNPSC group 1 exam official announcement - தமிழ்நாட்டில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்தறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக 92 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்கான அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள், ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் (http://tnpsc.gov.in) மூலம், விண்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

TNPSC group 1 exam official announcement - TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வணிகம்‌ மற்றும்‌ சட்டம்‌ இரண்டிலும்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும். சமூக அறிவியலில்‌ முதுகலை பட்டம்‌ அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் தொழில்துறை அல்லது தனிநபர்‌ மேலாண்மை அல்லது தொழிலாளர்‌ நலனில்‌ அனுபவம்‌, கிராமப்புற சேவையில்‌ முதுகலை பட்டமும் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிறைவடைந்தவராகவும்‌, 39 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

TNPSC group 1 exam official announcement -விண்ணப்பக் கட்டணம் : குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பதிவுக்‌ கட்டணமாக ரூ.150, முதனிலைத்‌ தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை எழுத்துத்‌ தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத்‌ தேர்வு அடங்கிய பதவிகளுக்கு மூன்று நிலைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதாவது, எழுத்துத்‌ தேர்வு, முதல்நிலைத்‌ தேர்வு, முதன்மை எழுத்துத்‌ தேர்வு, நேர்காணல்‌, வாய்மொழித்‌ தேர்வு மற்றும்‌ கலந்தாய்வு அடிப்படையில்‌ தகுதியானவர்கள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC group 1 exam official announcement - விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பப் படிவத்தில் ஏதாவது மாற்றங்களை செய்ய விரும்பினால், அதற்கு ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

முதனிலைத் தேர்வு (Prelims) அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் பிரதான (Main) தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று TNPSC தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வர்களே.... Instanews சார்பில் உங்களுக்கு ஆல் த பெஸ்ட்!

Updated On: 2022-07-21T15:10:39+05:30

Related News