/* */

பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வரும் பிப்ரவரியில் குரூப் 2, மார்ச் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் என்று, டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
X

வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் குரூப் 2, மார்ச் குரூப்-4 தேர்வு நடைபெறும் என்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, டி .என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர், சென்னையில் இன்று, செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டனர்.

அதன்படி, 2022ம் ஆண்டு 32 வகையாக தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2a தேர்வுக்கான அறிப்பாணை பிப்ரவரி மாதம் வெளியாகும். குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை மார்ச் மாதத்தில் வெளியாகும். அட்டவணை வெளியிடப்பட்ட 75 நாள்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். விடைத்தாள் ஏற்றக்கூடிய லாரிகளை, ஜிபிஎஸ் கொண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், குரூப் 2, மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வு நடைபெறும். இன்றைய தேதியின்படி, குரூப் 2 -ஏ மொத்தம் 5,831 காலிப்பணியிடங்களும், குரூப்-4 பிரிவில் 5,244 காலிப்பணியங்களும் உள்ளன. இந்த அறிவிப்புக்கு பின்னர் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குரூப்-4 தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்று, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...