thoughts in tamil-சிந்திக்கத் தெரியாதவர் மனிதனே அல்ல..! தெரிஞ்சுக்கங்க..!

thoughts in tamil-நல்ல சிந்தனை என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாக இருக்கவேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்தி சுயஅறிவை வளர்ப்பதாக இருக்கவேண்டும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
thoughts in tamil-சிந்திக்கத் தெரியாதவர் மனிதனே அல்ல..! தெரிஞ்சுக்கங்க..!
X

thoughts in tamil-நல்ல சிந்தனைகள் (கோப்பு படம்)

thoughts in tamil-சிந்தனைகள் என்பது அறிவின் அடிப்படையிலானது. மனிதனை நேர்வழியில் இட்டுச் செல்லும் அறிவுப்பாதை. நல்ல சிந்தனைகளே மனிதனின் வாழ்வினை மேம்படுத்தும். வாழ்க்கையில் சில அறிவினை அனுபவத்தின் வாயிலாகவே மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அனுபவம் என்பது ஒருவருக்கு ஒரு சிறந்த நண்பன். வாழ்க்கையின் வழிகாட்டி.

தான் விரும்பும் நிகழ்வுகள் நடக்கும்போது மகிழ்ச்சியுறும் மனிதர்கள் விரும்பாத நிகழ்வுகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெறுவதே அறிவுக்கான நீதி. வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களின் கலவையே. இதை புரிந்துகொள்வதே முதிர்ச்சியின் அடையாளம்.


உங்களை சிந்திக்கத்தூண்டும் சில சிந்தனைத் துளிகளை உங்களுக்காக தந்துள்ளோம். படீங்க. அனுபவம் பெற்றுக்கொள்ளுங்கள்.

பணம் இருப்பவன் உணவில் ருசியைத் தேடுகிறான். பணம் அற்றவன் பசியில் உணவைத் தேடுகிறான். இதுதான் வாழ்க்கையின் வேறுபாடு.

வாழ்க்கையில் யாரும் கற்றுத் தராத சில பாடங்களை தனிமை புரிய வைத்து விடுகிறது. வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்ற அறிவுப்பாடத்தை..!

இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதை வைத்து வாழக் கற்றுக்கொள்வதே வாழ்க்கையின் அடிப்படை மகிழ்ச்சித் தத்துவம்..!

தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும், உன்னால் மட்டுமே உருவாக்க முடியும். அதை பிறரில் தேடவேண்டாம்.

சொன்ன ஒரு சொல்; விடுபட்ட அம்பு; கடந்து போன வாழ்க்கை; நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது. சிந்தித்து அடுத்த அடி வைப்பது நல்லது.


thoughts in tamil

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள். ஏனெனின் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும். நான் என்பதே நிஜமாகும்.

வெற்றிபெறும் நேரத்தைவிட, நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெற்ற பெரிய வெற்றி. மகிழ்ச்சியோடு வாழப்பழகு..

ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தைத் தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை. ஒவ்வொருநாளும் வெற்றியே.

தோல்விகளைத் தழுவும் போது, ஏமாற்றமென நினைக்காமல் மாற்றமென நினையுங்கள். பாதிப்பு இருக்காது. உங்களுக்கும் மனதிற்கும். தோல்விகள் அனுபவப்பாடமாகும்.

எனக்கு பிரச்னை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள். பிரச்னை என்றால் பயமும் கவலையும் வந்து விடும். எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வந்து விடும். அடக்கவே வெற்றிக்கான முதல் படி


thoughts in tamil

தனியே நின்றாலும் தன் மானத்தோடு நில்; சுமையான பயணமும் சுகமாக மாறும்

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்விகள் பல கடந்து வென்றவர்களே. தோல்விகளை பாடமாக்கியவர்கள்.

எண்ணங்களிலுள்ள தாழ்வு மனப்பான்மையால் திறமைக்கு தடை போடாதீர்கள். முடியும் என்ற சொல்லே நம்பிக்கை. தடைகளை தகர்த்தெறிவதே வாழ்க்கை.

எல்லோரிடமும் உதைபடும் கால்பந்தாய் இருக்காதே. அது உன்னை அடிமைப்படுத்தும். சுவரில் எறிந்தால் திரும்பிவந்து முகத்தில் அடிக்கும் கைபந்தாயிரு. அது உன் தன்மானத்திற்கான சான்று.

தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால் தான் வெற்றி என்பது சாத்தியமாகும்.


thoughts in tamil

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். இன்றைய தினம் கடினமாக இருக்கலாம். நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம். ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும். விடியல் எல்லோருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும். அவமானங்களே வாழ்க்கையின் வெகுமானம்.

முடியும் வரை முயற்சி செய். உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடித்து சாதனையை எட்டும்வரை.

நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்

எல்லாம் தெரியும் என்பவர்களை விட, என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் வெற்றிக்கோட்டை இலகுவாக அடைகிறார்.


thoughts in tamil

உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே. அவர்களுக்கு முன் வாழ்ந்துக்காட்டு, உன்னைத் தேடிவருமளவுக்கு

தோல்வி உன்னை துரத்தினால், நீ வெற்றியை நோக்கி ஓடு..!

வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள். சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள். பலர் அதையும் கேட்பதில்லை.

வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது. சிலவற்றை சந்தோஷங்களாக. சிலவற்றை சங்கடங்களாக.

பிரபல்யமும், செல்வமும் கடல் நீரைப் போன்றது. அதனைக் குடிக்கக் குடிக்க தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.


thoughts in tamil

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.

பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள். ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.

பால் மட்டுமல்ல பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெட்டுப்போகாது. அதேபோல் நாம் மட்டும் நல்லவராக இருபதில் பயனில்லை. நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது.


thoughts in tamil

ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும், உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.

காணாமல் போனவர்களை தேடலாம். அதில் சிறிதும் தவறு இல்லை. கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே.

அனைவருக்கும் நல்லவராக அந்த இறைவனால் கூட இருக்க முடியாது. அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்வோம்.

கொடுப்பது சிறிது என்று தயங்காதே. வாங்குபவருக்கு அது பெரிதாக இருக்கலாம். எடுப்பது சிறிது என்று திருடாதே. இழப்பவருக்கு அது பெரிதாக இருக்கும்.

Updated On: 2023-01-30T17:17:15+05:30

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
 2. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
 3. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
 4. நாமக்கல்
  மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 6. திருவண்ணாமலை
  அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
 7. தேனி
  சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
 9. மாதவரம்
  செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
 10. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை