teacher quotes in tamil-உன்னை செதுக்கிய..சிற்பிகள்..! உனது அறிவின் பங்குதாரர்கள்..!

teacher quotes in tamil-அறிவுக் கனிகளில் பங்களித்து உன்னை அறிவுக் களஞ்சியமாக்கிய அறிவுத்திருக்கோவில் , ஆசிரியர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
teacher quotes in tamil-உன்னை செதுக்கிய..சிற்பிகள்..! உனது அறிவின் பங்குதாரர்கள்..!
X

teacher quotes in tamil-ஆசிரியர்கள் மேற்கோள்கள். (koppu

teacher quotes in tamil-ஆசிரியர் என்பவர் நமக்கு இன்னொரு தந்தை. எம்மை தத்தெடுத்த தந்தை. அறிவுக்கு வழிகாட்டிய சூரியன். தேவையான இடங்களில் கண்டிக்கும் தாயுள்ளம் கொண்டவர். தவறான பாதைகளில் சென்றுவிடக்கூடாது என்பதில் தெளிவான கொள்கை உடையவர். அந்த வழியில் எம்மை கைபிடித்து அழைத்துச் சென்ற வழிகாட்டி. நம் இலக்குகளை அவரே கனவு கண்டு அந்த கனவுப்பாதையில் நம்மை இட்டுச் செல்ல மெனக்கெடும் உழைப்பாளி.


கடவுளை நாம் நேரில் கண்டதில்லை. அவர்தான் ஆசிரியர் வடிவில் வந்து நிற்கிறார். அவர் பாதம் தொட்டு வணங்கி நிற்கிறேன். களிமண்ணாக இருந்த நம்மை எப்படிச் செதுக்கவேண்டும்? எப்படி உருவாக்கவேண்டும் என்று அறிந்த பொறியாளர் ஆசிரியர். கல்லாக கிடந்த நம்மை அறிவு உளி கொண்டு செதுக்கிய சிற்பி ஆசிரியர். முட்கள் நிறைந்த பாதையாக இருப்பினும் அதில் உள்ள முட்கள் நம்மை குத்தாமல் நேர்த்தியாக நம்மை பயணிக்க வைக்க முயற்சி எடுக்கும் பாதுகாவலன். திசையறியா ஆழ்கடலில் திக்கற்று நின்ற நம்மை திசைகாட்டி கரைசேர்த்த வள்ளல் ஆசிரியர். அவரின் புகழ் நிலைக்கும் மேற்கோள்கள். படிச்சுப்பாருங்க..

 • வெறும் கல்லாய் இருந்த எம்மை, பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய தன்னலமற்ற எமது ஆசான்களுக்கு நிகர் புவியில் யாரும் உண்டோ?
 • எங்கள் மூளையில் ஆணியாய் அடிக்கப்பட்ட அறிவு தீபமாய் ஏற்றப்பட்டது, ஆசிரியர்களினால் தான்! ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!
 • தன்னை உருக்கி, உலகிற்கே ஒளியேற்றும் தீபச்சுடர்கள், நம் ஆசிரியர்கள்!
 • ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள். பறக்கும் பட்டமல்ல நம் ஆசிரியர்கள்; நம்மை உயர் உயர பறக்க வைக்கும் நூலாகியவர்கள் நம் ஆசிரியர்கள்

teacher quotes in tamil

 • கல்வி என்னும் பெருங்கடலில் இருந்து, கரை சேர்த்திடும் கலங்கரை விளக்கமவர்... ஆசிரியர்.
 • எத்தனை அன்பு, அரவனைப்பு, எத்தனை அறிவுரைகள், ஆலோச்னைகள் எல்லாம் எதற்கு? எங்கள் வாழ்வு வளம் பெறத் தானே, உங்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்
 • அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்
 • நீங்கள் ஒரு அற்புதமான ஆசிரியர் மட்டுமல்ல, எங்களுக்கான தூண்டுகோலும் நீங்களே, உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் , ஊக்கத்திற்கும் என்றும் நன்றி கூறுவோம். இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்

teacher quotes in tamil

 • ஆசிரியர்கள் போல நண்பர்கள் கிடைத்தால், பாடங்கள் உன்னைப் படிக்கவைப்பார்கள். நண்பர்கள் போல ஆசிரியர்கள் கிடைத்தால், பாடமாய் உன்னைப் படிக்க வைப்பார்கள்...
 • கல்வி எனும் திரி போட்டு, அறிவு எனும் விளக்கேற்றி, வாழ்வினை ஒளிர செய்து, ஒளிந்திருக்கும் திறமைகளை மெருகூட்டிய உங்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்
 • நீங்கள் செல்லமாக அடித்த முதுகு சிலிர்க்கின்றது. என் உயர்வில் உம் உழைப்பும் இருக்கின்றது, உங்கள் நினைவு தினமும் மனதில் ஆர்ப்பரிக்கின்றது, இப்படிக்கு உங்கள் அன்பு இல்லத்தில்...

teacher quotes in tamil

 • ஆ - ஆறறிவுக்குள், சி - சிந்தனையைப் பெருக்கி ரி - சரியாமல் நிறுத்தி, ய - செயலைத் திருத்தி, ர் - கீர்த்தியை உயர்த்தி மனம் நிறையும் ஆசிரியருக்கு நன்றி..
 • சுயநலமில்லா சுயரூபம் தன் அறிவொளியை பிறருக்கு அறிவுரையால் ஏற்றுவாள், ஏறுபவனுக்கு ஏணி தந்து, திசை மாறியவனுக்கு திசை காட்டி , கல்விக்கண் திறந்து ஒழுக்கமெனும் ஒளியையும், தந்தார், காதைத் திருகி கற்பிக்கும் ஆசான்..!
 • இன்று வரையிலும், இனிமேலும் நாங்கள் காணும் வெற்றிகளுக்கும் நாங்கள் அடையும் புகழுக்கும் உரியவர்கள் நீங்கள் தானே

உலகின் உயர்வுக்கு உன்னத மாணவர்களை உருவாகிக்தித், தலைசிறந்து மிளிர, உடலாலும் உள்ளத்தாலும் உதவி நிற்கும் உன்னதத் தொழிலே ஆசிரியர்.. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

teacher quotes in tamil

 • தமிழின் உயிர் எழுத்தில் உள்ள உயிராய் எனக்கு கல்வி புகட்டிய அனைத்து ஆசான்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
 • அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும் இந்த தலைமுறையின் ஆசிரியர்களுக்கு, எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
 • நான் வாழ, நான் முன்னேற, எனக்காக உழைத்தவர்கள், நான் இன்று இன்பம் காண, அன்று துன்பம் பொறுத்தவர்கள், நான் முத்து சேர்க்க, மூச்சடக்கி முத்து குளித்தவர்கள், என் இளம் வயதில் கண்ட நடமாடும் தெய்வங்கள், என் ஆசிரியர்கள்..

teacher quotes in tamil

 • ஆசிரியர்கள் இல்லாதிருந்தால்மற்ற எந்த தொழில்களுமே இருக்காது. இங்குள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
 • கற்று தந்த விதைக்காக நன்றியுடன் இருப்பேன்.என்றும் உங்கள் மாணவனாக இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
 • கல்லூரி ஆசிரியர்கள் எனக்கு உரம் இட்டவர்கள். பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள். ஆசிரியர் குலத்திற்கு

உங்கள் மாணவனின் வாழ்த்துக்கள்.

 • நல்ல குறிகோள்களையும் சமுதாய உணர்வுகளையும் விதைத்து சிறந்த கல்வி பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
 • இந்த உலகில் இரண்டு புனித அறைகள் உள்ளன.ஒன்று தாயின் கருவறை.மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
 • கற்றலும் ஒரு காதல் என என் கற்பனையை பற்ற வைத்த என் ஆசிரியருக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
 • இன்று நான் அடைந்திருக்கும் வெற்றிக்கு அடித்தளம் இட்ட என் ஒவ்வொரு ஆசிரியருக்கும்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

 • நம்மை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப்படாத ஒரே ஜீவன்,நம் ஆசிரியர்கள் மட்டும் தான்…!

இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்.

 • ஒரு குழந்தை ஆசிரியராகும் வரை ஒரு நல்ல நபராக வளர முடியாது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
Updated On: 18 Sep 2022 12:59 PM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 2. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 4. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 5. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 6. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 7. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 8. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 9. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு