/* */

புதுமைப் பெண்கள் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற வேண்டுமா? இதைப்படியுங்க முதலில்

புதுமைப் பெண்கள் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுமைப் பெண்கள் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற  வேண்டுமா? இதைப்படியுங்க முதலில்
X

தமிழக அரசின்புதுமைப்பெண் திட்டம்.

தமிழகத்தில் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி வழங்க முன்னாள் முதல்வர் கருணாநிதி 1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தைத் தொடங்கினார். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல பெண்கள் நிதியுதவி பெற்றனர்.அடுத்து 2011-ல் ஆட்சிக்கு வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தாலிக்குத் தங்கம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இந்த திட்டத்தில் முதலில் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. பின்னர் 2016-ல் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா ஆன போது இந்த திட்டத்தில் தங்கத்தின் அளவை உயர்த்தி 8 கிராம் தங்கம் கொடுக்கப்பட்டது. இந்த திட்டமும் பெண்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

புதுமைப்பெண் திட்டம்

இந்த நிலையில் தமிழ்நாட்டின முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ், திருமண நிதியுதவி, தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தான் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, ''தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் படித்து முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டமானது ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் ஆகியவற்றில் படித்த மாணவிகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சான்றிதழ், பட்டயம் , இளங்கலைப் பட்டம் , தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவைகளில் சேருபவர்களுக்கு இது பொருந்தும். அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள்.கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதல் மந்திாி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

விண்ணப்பிக்க அழைப்பு

தற்போது இந்த திட்டத்தில் சேர விண்ணப்பம் செய்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 1-ந் தேதி தொடங்கும் விண்ணப்ப பதிவு 11-ந் தேதி முடிவடைகிறது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 Oct 2022 4:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  3. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  4. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  5. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  8. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  10. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...