குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியின் தென் மாவட்ட கிளைகளில், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
X

இது குறித்த விவரம் வருமாறு:

அறிவிப்பு வெளியிட்ட அலுவலகம்: பஞ்சாப் நேஷனல் வங்கி வட்ட அலுவலகம், அபர்ணா டவர்ஸ். 4வது தளம், பை-பாஸ் ரோடு, மதுரை-625010.

தொடர்புக்கு : தொலைபேசி - 0452 2601310 , மின் அஞ்சல் : comaduhrd@pnb.co.in

பணியின் பெயர்: சார்பு நிலைப்பிரிவில் துப்புரவுப்பணியாளர் ( பகுதி நேரம்) ஆள் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2021

காலி இடங்களின் விவரம்: மதுரை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம், 41 பணியிடங்கள்.

தகுதிகள்

1. வயது : 01.07.2021 அன்றுள்ள படி குறைந்த பட்சம் 18 வயது அதிகபட்சம் 24 வயது (02.07.1997 - 01.07.2003-க்கு இடையில் பிறந்தவர்கள் இரு நாட்களும் உட்பட) அரசு விதிகளின்படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்ல்; மாற்றுத்திறனாளி / செவிக்குறைபாடு உடையோர் பிரிவினருக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு. பொதுப்பிரிவில் உள்ள காலி இடத்திற்கு விண்ணப்பிக்கும் OBC SC/ST விண்ணப்பதாரர்களுக்கு, வயது சலுகை கிடையாது.

2. கல்வித்தகுதி: 01.07.2021 அன்றுள்ளபடி அதிகபட்சம் 10ம் வகுப்பு தோல்வி, குறைந்தபட்சம் கல்வித்தகுதி என்று எதுவும் இல்லை. படிப்பறிவு இல்லாதவர்களும் இப்பணிக்கு ( PTS ) விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

3. மாவட்ட குடியிருப்பு : மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட /வெளியிடப்பட்டுள்ள காவி இடங்களுக்கு, அந்த மாவட்டத்தில் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் கிடைக்கும்.

விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வலது மூலையின் மேல் பகுதியில் முறையாக ஒட்டவும். விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களின் சுயகையொப்பம் இட்ட ஜெராக்ஸ் பிரதிகள் மறவாமல் இணைக்க வேண்டும்.

1. இறுதியாக படித்த பள்ளி வழங்கிய மதிப்பெண் சான்றிதழ் (ஏதேனும் இருப்பின்).

2. இறுதியாக படித்த வகுப்பின் மாற்றுச் சான்றிதழ்

3. முகவரி மற்றும் அடையாள அட்டை நகல் (PAN அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம். வாக்காளர் அட்டை முதலியன).

4. நிரந்தர குடியிருப்பு முகவரிக்கான ஆதாரம் அல்லது வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருந்தால் அதன் பதிவு நகல்.

5. துணை தாசில்தார் அவர்களால் வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழ். (Nativity Certificate)

6. தாசில்தார் அவர்களால் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ் நகல். ஏதேனும் இருப்பின், (OBC விண்ணப்பதாரராக இருந்தால் 01.04.2021க்கு பிறகு Non-creamy Layer குறிப்பிடும் ஜாதி சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

7. வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் பதிவு செய்த அட்டையின் நகல்.

8. மாற்றுத்திறனாளி எனில், அரசு மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட சதவிகிதப்படி உள்ள சான்றிதழ் நகல்,

9. பிற சான்றிதழ்கள் ஏதேனும் இருப்பின் அவற்றின் நகல்,

10.விண்ணப்பதாரர் EWS (பொருளாதாரத்தில் பின் தங்கியவர்) -ன் கீழ் விண்ணப்பிக்கும் பொருட்டு கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரியில் ஒருவர்களால் 01.04.2021க்கு பிறகு வழங்கப்பட்ட வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் நகல்.

நிபந்தனைகள்

வரும் 20.12.2021 மாலை 5 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள்/ முறையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதனை தொடர்ந்து மாவட்ட Nativity சான்றிதழ் / ஜாதி சான்றிதழ் / முகவரி மற்றும் அடையாள ஆவணங்கள் ஆகியவற்றிற்கான நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்பட மாட்டாது. தேர்வு தொடர்பாக வங்கியின் முடிவு இறுதியானது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை முத்திரையிட்ட உறையில் "RECRUITMENT OF PTS IN SUBORDINATE CADRE - 2021-22" என்று குறிப்பிடப்பட்டு CHIEF MANAGER (HRD), Punjab National Bank, Circle Office என்ற, மேலே குறிப்பிட்டுள்ள கிளைகளின் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
 2. இந்தியா
  ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
 3. தமிழ்நாடு
  இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
 4. தர்மபுரி
  ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
 5. ஈரோடு மாநகரம்
  சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
 6. ஈரோடு மாநகரம்
  கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
 7. விளையாட்டு
  Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
 8. சங்கரன்கோவில்
  கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...
 9. ஈரோடு
  பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.,23) நீர்மட்ட நிலவரம்
 10. இந்தியா
  2024 குடியரசு தின விழா: ஜோ பைடனுக்கு அழைப்பு