விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
HIGHLIGHTS

விசாகப்பட்டினத்திலுள்ள போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் (Naval Ship Repair Yard) பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Tradesman (Skilled)
மொத்த காலியிடங்கள்: 302
Trade wise Vacancies:
Electronics Mechanic - 08
Electrician - 07
Instrument Mechanic - 08
Fitter - 37
Mechanic (Diesel) - 42
Ref & AC Mech - 11
Sheet Metal Worker - 18
Carpenter - 33
Mason (Building Constructor) - 07
Electronics Mechanic (Sonary Fitter) - 01
சம்பளவிகிதம்: ரூ.19,900 63,200
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற் பட்டுள்ள தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் General Intelligence/General Awareness/ Reasoning/General English/ Numerical Aptitude மற்றும் Trade Awareness தொடர்பான கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத்தேர்வு விசாகப் பட்டினத்தில் வைத்து நடத்தப்படும்.
எழுத்துத்தேர்வு நடை பெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் அட்மிட் கார்டு மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை www.davp.nic.in/Wriote ReadData/ADS/eng_10702_11_ 0017_2122b.pdf என்ற இணைய தளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தரவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் செல்ப்அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து பதிவு அல்லது விரைவு தபாலில் 5.10.2021 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Commodore Superintendent (Recruitment Cell),
Naval Ship Repair Yard (PBR),
Post Box No. 705, Haddo, Port Blair.