வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமா? வெற்றியாளர்களின் பொன்மொழிகள் உங்களுக்காக Motivational quotes in Tamil

Motivational Quotes in Tamil -வெற்றி என்பதை ஒவ்வொருவரும் சுவைக்கத் துடித்தாலும், எட்டாக்கனியாக இருப்பதை முயற்சித்தால் சுவைக்க முடியும் என வெற்றியாளர்கள் கூறியவை உங்களுக்காக

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
Motivational Quotes in Tamil
X

வெற்றியாளர்கள் பொன்மொழிகள்

Motivational Quotes in Tamil -ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் தனது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்படுகின்றது. இது அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி, யாரும் எதிர்பாராத ஒரு உயரத்திற்கு எடுத்துச் சென்று விடுகின்றது. இந்த திருப்புமுனை ஏற்படுவதற்கு அவனது தன்னம்பிக்கையை தூண்டும் ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும். அப்படி ஒன்றில் இருப்பது தான் வெற்றியாளர்களின் பொன்மொழிகளும்.

உங்களைத் தூண்டி உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்க்கும் இந்த பொன்மொழிகளின் தொகுப்பு உங்களுக்காக!

ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அங்கே உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றியடையக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும்.

அப்துல் கலாம்: வெற்றியின் ரகசியம் என்ன? சரியான முடிவுகள். சரியான முடிவுகளை நீங்கள் எவ்வாறு எடுக்கிறீர்கள்? அனுபவம் மூலம். அனுபவத்தை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்? தவறான முடிவுகள் மூலம்.

நெல்சன் மண்டேலா: என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.

முஹம்மது அலி: ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள்.

புரூஸ் லீ: வெற்றியடைவது எப்படி என்பதை அறிய எல்லோரும் விரும்புகிறார்கள், ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்வது எப்படி என்பதை அறிய யாரும் விரும்புவதில்லை.

லிண்ட்சே வோன்: வாழ்க்கை மிக விரைவாக மாறும், மிகவும் நேர்மறையான வழியில், நீங்கள் அதை அனுமதித்தால்.

ஹெலன் கெல்லர்: உங்கள் முகத்தை சூரிய ஒளியில் வைத்திருங்கள், நீங்கள் நிழலைப் பார்க்க முடியாது.

ஜாய்ஸ் பிரதர்ஸ்: வெற்றி என்பது மனதின் நிலை. நீங்கள் வெற்றியடைய விரும்பினால், உங்களை ஒரு வெற்றியாரளாக நினைக்கத் தொடங்குங்கள்.

கொலின் பவல்: வெற்றிக்கான இரகசியம் என்று எதுவும் இல்லை, இது முன்னேற்பாடு, கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளல்.

ஜிக் ஜிக்லர்: தடைகள் குறுக்கிடும் போது, இலக்கை அடைவதற்கான உங்கள் திசையை மாற்றுங்கள், இலக்கை அடைய வேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை மாற்றாதீர்கள்.

ஜாய்ஸ் பிரதர்ஸ்: வெற்றியில் ஆர்வமுள்ள மனிதர்கள், தோல்வியை ஒரு ஆரோக்கியமான, தவிர்க்கமுடியாத படிநிலையாக கருதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

வில்லியம் ஆர்தர் வார்டு: உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிந்தால், உங்களால் அதை அடைய முடியும். உங்களால் அதைக் கனவு காண முடிந்தால், உங்களால் அதுவாகவே ஆக முடியும்.

ராபர்ட் கோலியர்: வெற்றி என்பது நீங்கள் ஒவ்வொருநாளும் செய்யும் சிறு சிறு முயற்சிகளின் கூட்டுத்தொகையாகும்.

ராபர்ட் கியோசாகி: வெற்றியாளர்கள் தோற்பதற்கு பயப்படுவதில்லை. ஆனால் தோல்வியாளர்கள் பயப்பிடுகிறார்கள். தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும். தோல்வியை புறக்கனிக்கும் மக்கள் வெற்றியையும் புறக்கனிக்கிறார்கள்.

பென் ஸ்டீன்: வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதை அடைய இன்றியமையாத முதற்படி, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.

வின்ஸ் லோம்பார்டி: ஒரு வெற்றிகரமான மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு வலிமையின் பற்றாக்குறை அல்ல, அறிவின் பற்றக்குறை அல்ல, மாறாக விருப்பத்தின் பற்றாக்குறையாகும்.

ஸ்டீவ் ஜாப்ஸ்: வெற்றி பெற்ற தொழில் முனைவோரையும், வெற்றி பெறாத தொழில் முனைவோரையும் வேறுபடுத்துவது "விடாமுயற்சி" என்று நான் நம்புகிறேன்.

ஜாக்கி சான்: ஏதோ ஒன்றைச் சாத்தியமற்றது என்று என்னிடம் யாராவது சொல்வதை விட என் வெற்றியை உறுதி செய்யக்கூடியது வேறு எதுவும் இல்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2022-09-08T12:49:53+05:30

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...