life motivational quotes in tamil-துவண்டு கிடப்பவர்களை தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டும்தான்..!
life motivational quotes in tamil-'நம்பிக்கைதான் வாழ்க்கைங்க'. இதை முன்னோர்கள் சும்மா சொல்லி வைக்கவில்லை. அர்த்தம் உண்டு.
HIGHLIGHTS

life motivational quotes in tamil-நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள். உலகில் எல்லா உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை கொண்டே வாழ்கின்றன. சிங்கம் மான்களை வேட்டையாடுவதால் மான்கள் அஞ்சுவதில்லை. நரியும், நாய்க்கூட்டங்களும் பிடித்துவிடும் என்று முயல்களும் அஞ்சுவதில்லை. அவை தற்கொலை செய்துகொள்வதும் இல்லை.
அவை ஒரு நம்பிக்கையோடு வாழ்வை தொடங்குகின்றன. ஆனால், எச்சரிக்கையோடு கால் எடுத்து வைக்கவேண்டும் என்ற இயல் அறிவு எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. மனிதர்கள் மாத்திரமே வாழ்க்கையில் துன்பங்கள் வந்தால் துவண்டுபோவதும் அல்லது தற்கொலை செய்துகொள்வதும் போன்ற அவலங்களை செய்துகொள்கிறார்கள்.
உணவு தேட முடியாத விலங்குகள் இயற்கை வாழ்வை முடித்து வைக்கும்வரை வாழ்கின்றன. அவைகளிடம் இருந்தாவது மனிதர்கள் பாடங்கள் கற்கவேண்டும். அதனால், உங்கள் நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்துகொள்ளுங்கள். இதோ உங்களுக்கான வாழ்வை விழுமியம் ஆக்கும் மேற்கோள்கள்.
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று அதே பாதையில் நீயும் பின்தொடராதே, உனக்கான பாதையை நீயே சுயமாக தேர்ந்தெடு..! அதுவே உன்னை வெற்றிப்படிக்கு இட்டுச் செல்லும்..!
எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டால் என்ன..? என் நம்பிக்கை என்னை ஒருபோதும் கை விடாது..!
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்வதை தூக்கி எறியுங்கள்..! கனவுகள் முளைப்பது இருளில் தான்..அந்த இருளுக்குப்பின் விடிவும் உண்டு..கனவு நனவாவதும் உண்டு..!
life motivational quotes in tamil
சந்தேகம் என்கிற கந்தல் துணியை எரித்துவிடு...! நம்பிக்கை என்னும் புத்தாடையை அணிந்துகொள்..! விதைப்பது விதையாக இருப்பின் விருட்சமாவதும் உறுதி..! மகிழ்ச்சி உனக்குள் தானாகவே மலரும்..!
எனது நம்பிக்கை எனக்கு ஒளியாக இருப்பதால் நான் இருளைப் பற்றி கவலை கொள்வதில்லை..!
பறப்பதற்கு உனக்கு வசதிகள் இருந்தாலும் கூட தரையில் இருக்கவும் கற்றுக்கொள்..! உனக்கு சிறகுகள் இல்லாதபோதும் இழந்ததை எண்ணி வருந்தமாட்டாய்..!
அவமானப்படுத்தப்படும் அந்த நொடி வெறுப்பாக இருக்கலாம். ஆனால் அந்த அடுத்த நொடியில் இருந்துதான் உனக்கான வாழ்க்கையையே நீ தொடங்கவேண்டும்..! அவமானங்கள் எல்லாம் வெகுமானங்களாக அறுவடை செய்யவேண்டும்..!
life motivational quotes in tamil
துன்பம் நம்மை சூழ்ந்த போதும் தொலைந்துபோனது வாழ்க்கை என்று துவண்டுகிடக்க நீ என்ன கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவையா..? இல்லை..நீ சிறகடித்து பறக்கும் வானுயர் பறவை..!
வாழ்க்கைக்கடலில் தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதாக தவறாக சித்தரிக்கப்படுகிறது..! அது ஆணவத்தின் பிரதிபலிப்பல்ல..! அது கம்பீரம்..! தப்பில்லையே..?
எனக்கான அடையாளம் எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது..! அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..! அது என் இயல்புகளில் ஒன்றே..!
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள். வாழ்க்கையில் அவைகளும் பாடங்களே..! இன்பங்களை மட்டுமே ரசிப்பது வாழ்க்கையல்ல..! வலிகளைக் கற்றுக்கொள்ளும்போதுதான் நீ சிந்தனையாளனாக மாறுகிறாய்..!
life motivational quotes in tamil
பிறருடனான ஒப்பீடு நம்பிக்கையின்மையின் உண்மைப்பிரதி..! அதனால் உன்னை தாழ்த்திக்கொண்டு வாழ்க்கையை தொலைக்கிறாய்..! உன் மீதான கர்வம் உனக்குள் தீயாக இருக்கவேண்டும்..! உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே..!
பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கில் தவறு இருக்கலாம். அல்லது உன் முயற்சியில் சறுக்கல் இருக்கலாம்..! சரியான இலக்கை தேர்ந்தெடுத்து முழு மூச்சுடன் செயல்படு..வெற்றி உன் வசமாகும்..!
வேதனைகளை வென்றெடுப்பதே உனக்கான இன்னொரு சாதனைதான்..! எத்தனை சோதனைகள் வந்தாலும் வென்றடுப்பாய்..! துணிந்து செல்..!
என்னால் முடியும் என்பது ஒரு மந்திர வார்த்தை..அது உனக்குள்ளிருந்து ஒளியேற்றும்..! உன் அத்தனை முயற்சிக்கும் வெற்றியே விடையாகும்..!
life motivational quotes in tamil
எந்த சூழலும் உனக்கு பெரியதல்ல..உன் நம்பிக்கை அவைகளை தூசியாக்கும்..! மலை கூட மடுவாகத்தோன்றும்..! எதையும் எதிர்த்து நிற்கலாம் தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால், நீ தான் வெற்றியாளன்..!
உன் இலக்குக்கான குறி தவறினால் உனக்கான பயிற்சி என்று நேர்மறை சிந்தனை கொள்..! உன் அடுத்த முயற்சி வெற்றிக்கதவைத் திறக்கும்..!