எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்-ல் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவி : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

LIC HFL recruitment 2022 for Assistant Manager jobs-எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிங்க.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்-ல் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவி : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

LIC HFL recruitment 2022 for Assistant Manager jobs-எல்.ஐ.சி வீட்டுக்கடன் நிறுவனம்.(மாதிரி படம்)

LIC HFL recruitment 2022 for Assistant Manager jobs-எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடிச்சிருக்கீங்களா? உடனே விண்ணப்பிங்க.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் துணை நிறுவனம், LIC Housing Finance Limited. இது வீட்டு கடன்கள் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 80

அசிஸ்டெண்ட் (Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 33,960

அசிஸ்டெண்ட் மேனேஜர் (Assistant Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 80,110

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 800

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி எழுத்துத் தேர்வு:

LIC HFL recruitment 2022 for Assistant Manager jobs-இந்த தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) ஆகிய பிரிவுகளில் தலா 50 வினாக்கள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

நேர்முகத் தேர்வு :

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இதன் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

எப்படி விண்ணப்பிக்கணும் ?

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.lichousing.com/careers அல்லது https://ibpsonline.ibps.in/licaamjul22/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.lichousing.com/static-assets/pdf/Assistant_Assistant_Manager_Recruitment_Detailed_Advertisement.pdf?crafterSite=lichfl-corporate-website-cms என்ற இணையதள பக்கத்தில் இருந்து மேலும் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 2022-08-10T16:02:53+05:30

Related News