/* */

திருச்சி, தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு : உடனே விண்ணப்பிங்க

திருச்சி மற்றும் தூத்துக்குடி நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு 591 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

HIGHLIGHTS

திருச்சி, தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு :  உடனே விண்ணப்பிங்க
X

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வேலை வாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், திருச்சி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு சம்பந்தபட்ட மண்டலங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பதவியின் பெயர் - பட்டியல் எழுத்தர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 204 ( திருச்சி – 54. தூத்துக்குடி – 150,)

கல்வித் தகுதி - பி.எஸ்.சி (இளங்கலை அறிவியல்)

வயது வரம்பு : அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM/MBC (V) – 34, OC -32

சம்பளம் : ரூ. 2,410 + 4,049

பதவியின் பெயர் - உதவுபவர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 202 ( திருச்சி – 52,தூத்துக்குடி – 150,)

கல்வித் தகுதி - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரமபு அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM/MBC (V) – 34, OC -32

சம்பளம் : ரூ. 2,359 + 4,049

பதவியின் பெயர் : காவலர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 185 (தூத்துக்குடி – 150, திருச்சி – 35)

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM/MBC (V) – 34, OC -32

சம்பளம் : ரூ. 2,359 + 4,049

தேர்வு செய்யும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

திருச்சி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி – 620001

தூத்துக்குடி : மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், C 42, 43 & 44, சிப்காட் காம்ப்ளக்ஸ், மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்), தூத்துக்குடி -8

விண்ணப்பிக்க கடைசி நாள்:

திருச்சி : 30.11.2021

தூத்துக்குடி : 4-12-2021

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள பத்திரிக்கை விளம்பரத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.




Updated On: 24 Nov 2021 9:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  6. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்