முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்
கட்டணமில்லா இந்த பயிற்சி வகுப்பில் செப் 29 முதல் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் கலந்துகொள்ளலாம்.
HIGHLIGHTS

ஆசிரியர் தேர்வு வாரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக மதுரை மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகம் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள பயனாளிகள் மதுரை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0452-2564343 என்ற தொலைபேசி எண் மற்றும் peeomadurai17@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்
இந்த தகவலை, மதுரை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலக உதவி இயக்குநர் ஆ.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.