வருங்கால வைப்பு நிதி படிவங்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? Form 19 and 10c download

Form 19 And 10c Download-ஓய்வூதிய தொகை அல்லது திட்டச் சான்றிதழ் பெறுவதற்கு Form 10C மற்றும் முழு தொகையை பெற Form 19 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்வது எப்படி?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Form 19 And 10c Download
X

Form 19 And 10c Downloadவருங்கால வைப்பு நிதி என்பது இந்தியாவில் தொழிலாளர்களின் சேமிப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை Employee Provident Fund Organization (EPFO) என்ற ஆணையம் நிர்வகிக்கிறது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் EPF-ல் பங்களிப்பு அளிக்கிறார்கள். அந்த பங்களிப்பானது அவர்களின் மாத சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பணியாளர்களின் சம்பளத்தில் ஒரு தொகையையும் மற்றும் முதலாளியின் சார்பில் அதே அளவு தொகையையும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணமானது பிற்காலத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும்.

ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து 12% EPF பங்களிப்புக்கு செலுத்தப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனத்தின் சார்பிலும் பணியாளரின் PF கணக்கிற்குசெலுத்தப்படும்.

ஒரு பணியாளர் பணியில் இருக்கும்போதே திருமண, கல்வி செலவு வீடு கட்டுவது போன்ற சில காரணங்களுக்காக தங்களுடைய PF கணக்கில் உள்ள பணத்தை Form 31-யை பயன்படுத்தி எடுக்கலாம்

Form 19 and 10c download பணியாளர் முழுமையான EPF பணத்தை Claim செய்ய EPF Form 19 பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்த படிவம் ஓய்வூதிய நேரத்தில் முழு PF தொகையை பெறுவதற்கு பயன்படுகிறது. எனவே இதை PF Final Settlement Form என அழைக்கப்படுகிறது.

தொழிலாளி ஒரு நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து, பின்னர் 2 மாதங்கள் வரைக்கும் வேறு நிறுவனத்தில் பணியில் சேராமல் இருந்தால், Form 19-யை பயன்படுத்தி முழு தொகையையும் பெறலாம்.

ஓய்வூதிய தொகை அல்லது திட்டச் சான்றிதழ் (Scheme Certificate) பெறுவதற்கு EPF Form 10C பயன்படுத்தப்படுகிறது. ஒரு பணியாளரின் சேவைக்கலாம் 10 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே ஓய்வூதிய தொகையை Withdrawal செய்ய முடியும். 10 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்கலாம் இருந்தால் திட்டச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

பணியாளர் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அல்லது ஓய்வூதியதாரர் Form 19 மற்றும் 10C ஆகிய இரண்டையும் விண்ணப்பிக்க வேண்டும்.

எப்போது நீங்கள் உங்களின் முழு PF பணத்தை எடுப்பதற்கு விண்ணப்பித்தாலும் முதலில் Form 19 யை விண்ணப்பிக்க வேண்டும் . அதன் பின்னர் அதன் தொடர்ச்சியாக Form 10C யை விண்ணப்பிக்க வேண்டும் .அப்படி விண்ணப்பிக்கும்போது உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ளப்படும் .

EPFO ​​இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in/ இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

https://epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/Form19.pdf

https://epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/Form10C.pdf


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-07T17:27:36+05:30

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 2. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 3. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 4. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
 6. உலகம்
  போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
 7. காஞ்சிபுரம்
  புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
 8. காஞ்சிபுரம்
  வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
 9. தமிழ்நாடு
  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
 10. சினிமா
  யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!