அரசு அலுவலகத்தில் டிரைவர் பணி - நீங்களும் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மீன்வளத்துறை அலுவலகத்தில் டிரைவர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு அலுவலகத்தில் டிரைவர் பணி - நீங்களும் விண்ணப்பிக்கலாம்
X

தர்மபுரி மீன் வள மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று, தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) தர்மபுரி அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு ஊர்தி ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்ப, பொது போட்டி (முன்னுரிமை பெற்றவர்) பிரிவில் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊர்தி ஓட்டுநர் பணிக்கான தகுதிகள்:

1. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாளது தேதியில் தகுதியுள்ள இலகுரக வாகன ஊர்தி ஓட்டுநர் உரிமத்துடன் (Light Vehicle Driving Licence) மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு குறையாமல் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் சிறிய பழுதுகள் போன்றவை சரிசெய்தல் பணியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளை தகுதி தேர்வு மற்றும் நேர்காணலில் பரிசோதனை செய்யப்படும்.

இனசுழற்சியானது 1) OC-General-Priority என்ற முறையில் பின்பற்றப்படும். மேலும் 19500 - 62000 நிலை-8 என்ற சம்பள ஏற்றமுறையில் ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தமட்டில் 01.07.2021 அன்று உள்ளவாறு ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு எஸ் சி, எஸ்.டி வகுப்பினர் 37 வயதும், பி.சி/எம்.பி.சி வகுப்பினர்- 34 வயதும், ஓசி வகுப்பினர்-32 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) தர்மபுரி அலுவலகத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் அணுகி, விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஜாதி சான்றிதழ் நகல், ஊர்தி ஓட்டுநர் உரிமம் நகல், 3 ஆண்டுகள் ஊர்தி ஓட்டுநர் அனுபவ சான்று, ஆட்டோமைபல் ஒர்க்ஷாப்பில் பயிற்சி பெற்றமைக்கான சான்று நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) தருமபுரி அலுவலகம், 5/596, ஔவையார் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தருமபுரி - 636 705, தொலைபேசி எண்:04342 233923 என்ற முகவரிக்கு 6.12.2021 பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்க தக்க வகையில், விண்ணப்ப உறையின் மேல் "ஊர்தி ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம்" என எழுதி அனுப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2021-12-02T06:24:51+05:30

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
 2. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
 3. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
 4. நாமக்கல்
  மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 6. திருவண்ணாமலை
  அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
 7. தேனி
  சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
 9. மாதவரம்
  செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
 10. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை