/* */

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுனர் பயிற்சி

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் 2019/2020/ 2021-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்து, தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுனர் பயிற்சி
X

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியில் செயல்பட்டுவருகிறது. இந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ITI/பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, "தொழில் பழகுநனர் சட்டம் 1961" விதிகளுக்கு உட்பட்டு உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள், காலியிட விபரம், பயிற்சி காலம், உதவித் தொகை விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பயிற்சியின் பெயர்: Apprenticeship Training

மொத்த காலியிடங்கள்: 675

கல்வித்தகுதி:

வரிசை எண் 1 முதல் 11 வரையுள்ள தொழிற்பிரிவுகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி பெற சம்மந்தப்பட்ட டிரேடில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

PASAA தொழிற்பிரிவிற்கு COPA டிரேடில் ITI படித்திருக்க வேண்டும். Ac countant பிரிவிற்கு B.Com., Data Entry Operator பிரிவிற்கு B.Sc. (Computer Science)/ BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant (HR) பிரிவிற்கு BBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து படிப்புகளுக்கும் 2019/2020/ 2021-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.10.2021 தேதியின்படி 14 வயது பூர்த்தி யடைந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் மதிப் பெண் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க கூடாது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரியை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் 7.9.2021 அன்று, நேர்முகத் தேர்வு 13.9.2021 அன்று நடைபெறும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் 27.9.2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப் பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.8.2021.

ஆன்லைனில் விண்ணப்பித்தபின் அதை பிரிண்ட் எடுத்து அதனுடன் சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட கல்வித்தகுதி சான்று, மதிப் பெண்பட்டியல், சாதி சான்றிதழ் போன்ற தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 30.8.2021 தேதிக்கு முன்னர் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

பொது மேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,

வட்டம்-20,

நெய்வேலி -607803.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://www.nlcindia.in

இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Updated On: 23 Aug 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்