திருவண்ணாமலையில் 'அப்ரண்டிஷ்சிப்' மேளா

Apprenticeship Mela 2022 -திருவண்ணாமலையின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 14ம் தேதி, 'அப்ரண்டிஷ்சிப்' மேளா நடக்கிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் அப்ரண்டிஷ்சிப் மேளா
X

திருவண்ணாமலையின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 14ம் தேதி, ‘அப்ரண்டிஷ்சிப்’ மேளா நடக்கிறது.

Apprenticeship Mela 2022 -திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பிரதம மந்திரி தேசிய 'அப்ரண்டிஷ்சிப்' மேளா, மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம், வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், மத்திய அரசு நிறுவனங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் செய்யார் சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு, 100க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

என்சிவிடி மற்றும் எஸ்சிவிடி முறையில் அரசு மற்றும் தனியார் ஐஐடியில் பயிற்சி பெற்ற, 2022 ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 2022 ம் ஆண்டு முன்னதாக தேர்ச்சி பெற்ற, அனைத்து மாணவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம். தொழில் பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித் தொகையாக, ரூபாய் 6000 முதல் 14,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தொழிற்பழகுநர் பயிற்சிக்குப் பின், 'டைரக்டர் ஜெனரல் ட்ரைனிங்' மூலம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் தொழில் பழகுநர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேலும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.

இம்முகாமிற்கு வருகை புரியும் பயிற்சியாளர்கள். என்ற www.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து, அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வருமாறு கலெக்டர் முருகேஷ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

11-ம்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற, வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முகாம் அன்று, தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதி சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2022-11-09T10:45:23+05:30

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்