/* */

'கலாம்' ஐயா குறிக்கோளில் வளர்ந்தால் புதிய இந்தியாவை உருவாக்'கலாம்'..!

APJ Abdul Kalam Quotes in Tamil-எதிர்கால இந்தியா மாணவர்களின் கையில்தான் உள்ளது. அதற்காகவே மாணவர்களை ஆக்கப்பூர்வமான குடிமகன்களாக, அறிவுப்பூர்வமாக சிந்திக்கக்கூடியவர்களாக உருவாக்க விரும்பினார்.

HIGHLIGHTS

APJ Abdul Kalam Quotes in Tamil
X

APJ Abdul Kalam Quotes in Tamil

APJ Abdul Kalam Quotes in Tamil

அப்துல் கலாம், 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று பலராலும் குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். மேலும் இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும், பின்னர் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

மாணவர்கள் எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மிகப்பெரிய சக்தி. ஆகவே, அவர்களை அறிவுமிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்ற ஆழ்ந்த கருத்து உடையவர். அதனால், பல கல்வி நிறுவனங்களுக்குச் சென்று மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கான வித்தாக இருந்தார். அவர் உயிர்விடும் தருணத்தில் கூட மாணவர்களின் முன் உரையாற்றியபோதுதான் மயங்கி விழுந்து உயிர் துறந்தார்.

அப்துல் கலாமுக்கு பிடித்த கண்டுபிடிப்பு

அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், ராக்கெட்களை தயாரித்ததைவிட மாற்றுத் திறனாளிகளுக்காக எடை குறைந்த செயற்கைக் கால்கள், இதய நோயாளிகளுக்கான ஸ்டெண்ட் கருவியையும் கண்டுப்பிடிக்க உதவியதைத்தான், கலாம் தனக்குப் பிடித்தமான கண்டுப்பிடிப்புகள் என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.

ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!

ஒரு மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்திக்கு ஒளி கொடுப்பதால்

அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.

கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.

உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,

கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,

எப்போதும் மண்டியிடுவதில்லை.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னை கொன்று விடும்,

கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடலாம்.

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்

ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள

ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்,

உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின்

பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது

உங்கள் கைகளில் தான் உள்ளது.

உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே.

ஏனென்றால், கையே இல்லாதவனுக்குகூட எதிர்காலம் உண்டு.

வெல்வோம், சாதிப்போம், வேதனைகளை துடைத்தெறிவோம்

எந்தை அருளால் எதுவும் வசமாகும்.

வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்

ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்

ஒரு லட்சியம் - சாதியுங்கள்

ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்

ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்

ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்.

ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி

என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 9:43 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி