50 உதவி அரசு வழக்கறிஞர் பணி இடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கிரேட் 2 பிரிவில் காலியாக உள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

50 உதவி அரசு வழக்கறிஞர் பணி இடங்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஎன்பிசி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது புதியதாக சட்டத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரேட் 2 பிரிவில் காலியாக உள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பதவி : உதவி அரசு வழக்கறிஞர்கள்
கல்வித்தகுதி : அரசு அங்கீகரித்த துறையில் பிஎல் படித்திருக்க வேண்டும்.
இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக இருக்க வேண்டும்
தமிழில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம் : ரூபாய் 56,100 - 1,77,லட்சம் வரை
வயது வரம்பு : 34 வயது வரை
தமிழக அரசின் விதிகளின்படி எஸ் சி, எஸ் டி, எம் பி சி, ஓ பி சி உள்ளிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 24
கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in
www.tnpscexams.in தளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.