தமிழக காவல் துறையில் 3,552 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கிறது.
மொத்த காலிப் பணியிடங்களில் 20% பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.
மொத்த பணியிடங்கள்: 3,552
ஊதிய விகிதம்: ரூ.18,200 - 67,100.
வயது :
18 முதல் 31 வயது வரை
கல்வித் தகுதி :
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையம் :
எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட சீட்டில் எழுத்துத் தேர்வு மைய விவரம் தெரிவிக்கப்படும். இவ்வாரியத்திற்கு எழுத்துத் தேர்வுக்கான மையங்களின் எண்ணிக்கையை கூட்டவும், குறைக்கவும் அல்லது ஒரு விண்ணப்பதாரரை வேறு மையத்திற்கு நிர்வாக காரணத்தினால் மாற்றவும் உரிமை உண்டு. விண்ணப்பதாரர் தேர்வுகூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
தேர்வுக்கட்டணம்:
ரூ.250/- தேர்வுக் கட்டணத்தை இணையதள வழி (இணையதள வங்கி / வங்கி கடன் அட்டை / வங்கி பற்று அட்டை | UPI ) மற்றும் இணையமில்லா வழியில் SBI வங்கியின் செலுத்துச் சீட்டு மூலமும் செலுத்தலாம்.
இணையவழி விண்ணப்பம்:
விண்ணப்பதாரர்கள் இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏனைய இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தபால் மூலமாக தேர்வுக்கூட சீட்டு அனுப்பப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்களின் அடிப்படையிலும், விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ள பதவி விருப்பபும், காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்பு வாரி விகிதாச்சார அடிப்படையில், வகுப்பு வாரி சுழற்சி முறையிலும் மாவட்ட / மாநகர ஆயுதப்படை அல்லது தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அல்லது இரண்டாம் நிலை சிறைக் காவலர் அல்லது தீயணைப்பாளர் பதவிக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பம் ஆரம்ப தேதி: 07.07.2022
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.08.2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here