ஐடிஐ முடித்தோருக்கு மத்திய ரயில்வேயில் 2,422 காலிப் பணியிடங்கள்
ஐடிஐ முடித்தோருக்கு மத்திய ரயில்வேயில் 2,422 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
HIGHLIGHTS

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் 2,422 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
அதன்படி, மும்பை- 1401, புசாவல்- 418, புனே- 152, நாக்பூர்-114, சோலாப்பூர்- 79 என மொத்தம் 2,422 காலிப்பணியிடங்கள் அடங்கும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சியுடன் கூடிய ஐடிஐ படிப்பை முடித்தவர்கள் இந்தப் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: இந்தியாவில் உள்ள இந்த ரயில்வே பணிகளுக்கு 15 வயது முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
UR/OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
SC/ST/பெண்கள்/PWD பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஆன்லைன் விண்ணப்பங்கள் 17 ஜனவரி 2022 முதல் 16 பிப்ரவரி 2022 க்கு முன் https://rrccr.com/TradeApp/Login என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணபிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https://rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.