என்னடி முனியம்மா கண்ணுல மையி - பாடகர் மரணம்..

 • புகழ் பெற்ற பாடகர் T.K.S.நடராஜன் மரணம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
என்னடி முனியம்மா கண்ணுல மையி - பாடகர் மரணம்..
X

'என்னடி முனியம்மா பாடல் புகழ்' தி.கே.எஸ்.நடராஜன் 

டிகேஎஸ் நடராஜன் என்பவர் தமிழகத் திரைப்பட நடிகர் மற்றும் தெம்மாங்கு பாடகர் ஆவார்.இவர் 1933 ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தார். தமிழ் நாடகத்துறையில் புகழ்வாய்ந்த டிகேஎஸ் கலைக்குழுவில், இவர் சிறுவனாக இருந்தபோது சேர்ந்து நடித்ததால் நடராஜன் என்ற இவரது பெயருக்கு முன்னாள் டிகேஎஸ் என்ற அடைமொழியோடு டிகேஎஸ். நடராஜன் என அழைக்கப்பட்டார்.

1954 இல் வெளியான ஸ்ரீதர் வசனம் எழுதிய ரத்தபாசம் படத்தில் டிகேஎஸ் நடராஜன் திரைப்பட நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பின் நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, பொன்னகரம், தேன் கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர் , இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் தெம்மாங்கு பாடலாக சங்கர் கணேஷ் இசையில் டிகேஎஸ் நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடல் தான் அவரைத் தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது. "கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடலும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து டிகேஎஸ் நடராஜன் தெம்மாங்கு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். அவர் பாடிய என்னடி முனியம்மா பாடல் நடிகர் அர்ஜுன் நடித்த 'வாத்தியார்' படத்தில் மீள்கலப்பு (remix) செய்திருந்தார்கள். அந்த பாடலிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்திருந்தார்.

பலருக்கும் அறிமுகமான நடிகரும், "என்னடி முனியம்மா கண்ணுல மையி" பாடலின் மூலம் புகழ் பெற்ற பாடகருமான T.K.S.நடராஜன் (வயது 87) இன்று காலை 6.30 மணிக்கு இயற்கை எய்தினார். விலாசம்: 71, VSM கார்டன் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 83.

Updated On: 2021-05-11T07:29:39+05:30

Related News