/* */

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பார்மசி கல்லூரிகள்

ஈரோடு மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 5 பார்மசி கல்லூரிகள் குறித்த தகவல்கள்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5  பார்மசி   கல்லூரிகள்
X

Pharmacy College in எரோடே ஈரோடு மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 5 பார்மசி கல்லூரிகள் பட்டியலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதன் சிறப்பை பெறுகின்றன. இந்த தரவரிசை கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதி, பணிபுரியும் ஆசிரியர்களின் தரம், வளாக வேலை வழங்கும் நிறுவனங்கள் போன்றவைகளின் அடிப்படையில் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஜே.கே.கே.நட்ராஜா மருந்தியல் கல்லூரி

1985ஆம் ஆண்டு குமாரபாளையத்தில் தொடங்கப்பட்ட ஒரு தனியார் மருந்தியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் B.Pharm, M.Pharm மற்றும் Pharm D ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்திய பார்மசி கவுன்சில் AICTE, புது தில்லி மற்றும் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்றுள்ளது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு - 2018 (NIRF), மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) மற்றும் அரசு வெளியிட்டுள்ள தரவரிசையில், J.K.K.நட்ராஜா மருந்தியல் கல்லூரி, இந்தியாவின் முதல் 50 பார்மசி கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளது..

இக்கல்லூரியில் சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள், டிஜிட்டல் வகுப்பறைகள், புதிய ஆய்வகங்கள் மற்றும் மற்றும் சுத்தமான சூழல் உள்ளது

வெள்ளாளர் மருந்தியல் கல்லூரி

2018 - 19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் B.Pharmacy & D. Pharmacy இரண்டு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. 60 இடங்களைக் கொண்ட இக்கல்லூரியில் 2021 - 22 ஆம் கல்வியாண்டில் இருந்து B.Pharmacyக்கான ஆண்டு சேர்க்கை 100 இடங்களாக அதிகரிக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்து 6 கிமீ தொலைவில் திண்டலில் கல்லூரி அமைந்துள்ளது.

கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நந்தா காலேஜ் ஆஃப் பார்மசி

நந்தா கல்வி நிறுவனங்களின் நந்தா காலேஜ் ஆஃப் பார்மசி, 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இக்கல்லூரி, தமிழ்நாட்டில் உள்ள சிறந்த மருந்தியல் கல்லூரிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி நிறுவனம் D.Pharm (2 ஆண்டுகள்), B. Pharm (4 ஆண்டுகள்), Pharm ஆகிய படிப்புகளை வழங்குகிறது புது தில்லி, பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ளது.

முகவரி: கூரப்பாளையம் "பிரிவு", பிச்சாண்டம்பாளையம் அஞ்சல், ஈரோடு -638 052,

Pharmacy College in Erode

ஈரோடு மருந்தியல் கல்லூரி (ECP)

1992 ஆம் ஆண்டு ஈரோடு கல்வி அறக்கட்டளையின் கீழ் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி தமிழ்நாடு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை, இந்திய பார்மசி கவுன்சில் (PCI) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), புதுதில்லி ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில், B.Pharm, M.Pharm மற்றும் Pharm D, Ph.D ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது

ஈரோடு காலேஜ் ஆஃப் பார்மசி மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், பெருந்துறை மெயின் ரோடு, வேப்பம்பாளையம், வள்ளிபுரத்தம்பாளையம் (Po), ஈரோடு-638112,

எஸ்.எஸ்.எம். பார்மசி கல்லூரி

2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் இது AICTE, இந்திய பார்மசி கவுன்சில், புது தில்லி தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை மற்றும் தரமான கல்வி மற்றும் வசதிகளை வழங்குகிறது. இதில் 60 மாணவர்கள் படிக்கின்றனர்

டி பார்மா, பி பார்மா, பார்ம் டிஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது

Updated On: 3 July 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  2. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  3. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  4. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  5. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  6. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  7. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  9. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைக்கு மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?