/* */

தற்காலிக ஆசிரியர் பணி: திங்கள் முதல் விண்ணப்பிக்கலாம்

Temporary Teacher Vacancy - தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தற்காலிக ஆசிரியர் பணி: திங்கள் முதல் விண்ணப்பிக்கலாம்
X

Temporary Teacher Vacancy -உயர் நீதிமன்ற உத்தரவின்படி 13,000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் முதல் ஜூலை 6ஆம் தேதி மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிட விபரங்கள் அனைத்தையும் அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும், சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆறாம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 10:42 AM GMT

Related News