/* */

மவுசு குறையாத பார்ம்-டி (PHARM D) படிப்பு - இது ஒரு புதிய பாதை!

D Pharm Meaning in Tamil-PharmD பட்டம், டாக்டர் அளவுக்கு பேசப்படும் ஒரு முக்கிய படிப்பாக பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

மவுசு குறையாத பார்ம்-டி (PHARM D) படிப்பு - இது ஒரு புதிய பாதை!
X

PharmD மாணவி (மாதிரி படம்)

D Pharm Meaning in Tamil-இந்திய பார்மசி கவுன்சில் (Pharmacy Council of India -PCI) அனுமதியுடன் PharmD படிப்பு இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த படிப்பு அமெரிக்காவில் 1955-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. PharmD படிப்பு , 6 வருடம் (5 வருடம் படிப்பு + 1 ஆண்டு இன்டர்ன்ஷிப் (எ) மருத்துவமனை பயிற்சி) ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பு. PharmD பட்டதாரிகளின் பெயருக்கு முன்பாகவும் "டாக்டர்" பட்டம் சான்றிதழில் வழங்கப்படும்.

பாடத்திட்டம் :

Pharm.D படிப்பு மாணவர்களை 4 விதமாகத் தயார் படுத்துகிறது. மருந்தியலாளராக உருவாக்குவது, மருத்துவருடன் இணைந்து பணியாற்றுவது, புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆலோசனைகளை வழங்குவது, மருந்துக்கும் உணவுக்கு மிடையேயுள்ள தொடர்பை விளக்குவது போன்ற நுணுக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் மருத்துவமனை பயிற்சியை (Internship) உள்ளடக்கி பாடத்திட்டம் உருவாக்கப்படுள்ளது.

Pharm.D படிப்பில், நோய் அறிதல்முறைகள், சிகிச்சைமுறைகள், மருந்துசெலுத்தும்முறைகள், தெராபிடிக்ஸ்அவுட்கம், பார்மகோ எகனாமிக்ஸ், பார்மகோ தெரபி ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. ஓர் ஆண்டுக்கு ஒரு கல்லுரியில் 30 மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள PCI அனுமதி வழங்கியுள்ளது. இந்த படிப்பில் வழக்கமான பார்மசி பாடங்களுடன், கிளினிக்கல் பார்மசி குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் இதற்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மருந்தாளுநர்களின் தேவையை மருத்துவத்துறைக்கு பயன்படுத்தும் வகையில் Pharm.D படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்ததுறையில் வல்லுனர்களாக உருவெடுக்கும் மாணவர்கள் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்க இயலாது. ஆனால், இவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் பற்றி ஆலோசனை வழங்கலாம். Pharm.D படிப்பின் கடைசி 12மாதங்கள் இன்டர்ன்ஷிப்பைக்(Internship) கொண்டிருக்கும். இந்த இன்டர்ன்ஷிப் காலத்தில் மருத்துவர்களுடன் சேர்ந்து நோயாளிகளைச் சந்திப்பது, மருந்து தொடர்புடைய முக்கியத் தகவல்களை நோயின் தன்மைக்கேற்ப பரிந்துரைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது? :

இந்தியா முழுவதும் 125 பார்மசி கல்லூரிகளில்Pharm.D, படிப்புகளை நடத்த பார்மசி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. Pharm.D படிக்க விரும்பும் அனைத்து மாணவமாணவிகளும், தாங்கள் சேர விரும்பும் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் இந்திய பார்மசி கவுன்சில்(PCI) அங்கீகாரம் பெற்றுள்ளதா என முதலில் உறுதிசெய்ய வேண்டும். மேலும் அந்தகல்லூரி, பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழகத்துறையில் இணைந்த கல்லூரியா என உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டின் விவரங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கின்றன. பல்கலைக்கழகங்களால் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்பில் சேர அடிப்படை தகுதிகள் என்ன?

பிளஸ்2 பாடப்பிரிவில் உயிரியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தாராளமாக Pharm.D படிப்பில் சேர்ந்து தங்களது மருத்துவம் சார்ந்த கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

பிளஸ்2 மாணவர்கள் அல்லது D.Pharm., முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர முடியும்.

(1) 10 + 2 இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் / உயிரியல் பாடப்பிரிவுடன், குறைந்தது 50% மதிப்பெண்களும்தேவை.

(2) ஒரு PCI- அங்கீகரித்த நிறுவனத்திலிருந்து D.Pharm.

(3) PCI மூலம் அங்கீகரிக்கப்பட்ட +2 மற்றும் D.Pharmக்கு இணையான வேறு தகுதி. 3 வருட 'போஸ்ட் பாக்கலோரியேட்-(Post baccalaureate)' படிப்புக்கு, B.Pharm மற்றும் M.Pharm முடித்த பட்டதாரிகள், Pharm.D ன் 4-வது வருட நிலையில் நேரடியாக இணைந்து மூன்று ஆண்டுகளில் படிப்பை முடிக்கலாம்.

என்ன விதமான வேலை வாய்ப்புகள்?:

Pharm D முடித்த பிறகு நீங்கள் மேல்படிப்பை தொடரலாம். Pharm. D பிறகு Ph.D., MBA படிக்கலாம். மிக பிரகாசமான வேலை வாய்ப்ப்புகள் Pharm D படிப்பிற்கு உண்டு. தகுதி, மற்றும் திறமையை பொறுத்து, கீழ்கண்டவேலைவாய்ப்புகள்உள்ளன.

A) Health Care (Hospital)

1. Clinical Ptrarmaclst

2. Drug information Pharmacist

3. Quality Service Officer

4. Clinical Pharmacy Manager

5 Research Associate

6. Hospital Administration

7. Medical Writer

B) Clinical Research Organization

I. Clinical Team Leaders

2. Clinical Research Associate

3. Clinical Trial Site Manager

4. Clinical Project Manager

C) Public Health Sector

Community Pharmacist

D) Research and Development

1.Pharmacokinetic/ Phormacodynamics Analyst

2.Bioavailability / Bioequivalence Specialist

E) Academics

Teaching B. Pharm / M.Pharm / Pharm.D

எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? :

வருடத்திற்கு 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை கிடைக்கும்.

நீங்கள் Pharm.D பற்றி மேலும் அறிய JKKN மருந்தியல் கல்லுரியை அணுகவும். இக்கல்லூரி இந்திய பார்மசி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது J. K. K. ரங்கம்மாள் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளமுகவரி: https://pharmacy.jkkn.ac.in/

Ph: 9345855001


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Feb 2024 4:46 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்