ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிங்க;ஒய்யார வேலை வாங்குங்க..! வெளிநாட்டுக்கும் பறக்கலாம்..!

ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பவர்களுக்கு உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வேலை கிடைக்கும். திறமை மட்டுமே நமது முதலீடு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிங்க;ஒய்யார வேலை வாங்குங்க..! வெளிநாட்டுக்கும் பறக்கலாம்..!
X

ஹாய், கைஸ் கடந்த பதிவில் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பட்டங்கள் குறித்து பார்த்தோம். அதேபோலவே இன்று நாம் பார்க்கப்போவதும் ஒரு வேலை சார்ந்த படிப்பாகும். பிளஸ் 2 முடித்த உங்களுக்கு ஒரு நல்ல படிப்பை தேர்வு செய்வதில் குழப்பம் இல்லாமல் இருக்க உங்களுக்கு நல்ல வழி காட்டுவதில் Instanews மகிழ்ச்சி அடைகிறது.

9. ஓட்டல் மேலாண்மை (Hotel Management) படிப்புகள்:

நாம் ஏற்கனவே பார்த்த ஜர்னலிசம் படிப்பை போலவே இதுவும் வேலை சார்ந்த படிப்புதான். இந்த படிப்பு ஓட்டல் மற்றும் விருந்தோம்பல் துறையில் நிர்வாகப் பொறுப்புகளை திறமையாக செய்ய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. பட்டப்படிப்புக்கான காலம் 3 ஆண்டுகள் ஆகும். டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. அதன் கால அளவு 1-2 ஆண்டுகள் இருக்கலாம்.

சுற்றுலாத்துறை : (Tourism Department)

இந்தியாவின் சுற்றுலாத்துறை சிறப்பான காலகட்டத்தில் உள்ளது. அதனால் ஓட்டல் வணிகமும் சிறப்பாகவே உள்ளது. நமது அரசும் சுற்றுலாத் துறையை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் ஓட்டல் வணிகம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

திறமையாக ஓட்டல் நிர்வாகம் செய்யும் பட்டதாரிகளை பெரிய மற்றும் நடுத்தர அளவிலான ஓட்டல்கள் அவர்களை மதிப்புடன் அணுகி வேலை வழங்குகிறது. ஐந்து நட்சத்திர மற்றும் பிற உயர் தரமதிப்பீடு பெற்ற ஓட்டல்கள் திறமையுள்ளவர்களை தேடி வேலை தருகிறது. 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கலைப் பிரிவு மாணவர்கள் இந்த படிப்பைத் தொடரலாம்.

ஆர்ட்ஸ் ஸ்ட்ரீம் மாணவர்களுக்கான சில பிரபலமான ஓட்டல் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை படிப்புகள் :

 • BHM (இளங்கலை ஹோட்டல் மேலாண்மை) BHM (Bachelor of Hotel Management)
 • ஹோட்டல் நிர்வாகத்தில் டிப்ளமோ -Diploma in Hotel மேனேஜ்மென்ட்
 • BHMCT (Bachelor of Hotel Management and Catering Technology)
 • பேக்கிங், பானங்கள் மற்றும் கேட்டரிங் டிப்ளமோ (Diploma in Baking, Beverages and Catering)
 • ஓட்டல் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை இளங்கலை(Bachelor of Hotel and Hospitality Management)
 • BHA (Bachelor of Hotel Administration)
 • DHMCT (Diploma in Hotel Management and Catering Technology)
 • பி.எஸ்சி., Hospitality and Travel மேனேஜ்மென்ட்
 • பி.எஸ்சி., Hotel and Hospitality Management

ஓட்டல் மேலாண்மை பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான பாடங்கள்:

 • தொடர்பு திறன் -Communication Skills
 • வெளிநாட்டு மொழி -Foreign Language
 • உணவு தயாரிப்பு - Food Production
 • பயண மேலாண்மை -Travel Management
 • முன் அலுவலக செயல்பாடுகள் - Front Office Operations
 • வீட்டு பராமரிப்பு - HouseKeeping
 • மேலாண்மை - மேனேஜ்மென்ட்
 • கணக்கியல் - Accounting
 • ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் - Nutrition and Food Science
 • மக்கள் தொடர்பு - Public Relations
 • சந்தைப்படுத்தல் - Marketing

ஓட்டல் நிர்வாக வேலைகள், சம்பளம் :

இந்தியாவில், ஓட்டல், விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. BHM அல்லது BHMCT படிப்பை முடித்த மாணவர்கள் - ரிசார்ட்ஸ், ஓட்டல்கள், கிளப் ஹவுஸ், கப்பல்கள், டூர் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் போன்ற இடங்களில் நல்ல வேலையை பெறலாம்.

மாநில சுற்றுலாதுறைகளும் ஓட்டல் மேலாண்மை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துகின்றன. சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் பணிபுரிய ஓட்டல் மேலாளர்களை அரசு நியமிக்கிறது.

வேலை வழங்கும் நிறுவனங்கள் :

மேலே குறிப்பிட்டுள்ள விருந்தோம்பல் நிறுவனங்களில், ஓட்டல் மேலாண்மை பட்டதாரிகள் பின்வரும் வேலைகளுக்குச் செல்லலாம். ஓட்டல் மேலாளர், ரிசார்ட் மேலாளர், வாடிக்கையாளர் சேவை மேலாளர், சமையலறை மேலாளர், ஸ்டோர்/கொள்முதல் மேலாளர், உதவி மேலாளர் போன்றவைகள். தொடக்கச் சம்பளம் வேலை அடிப்படையிலும் நிறுவனத்தைப்பொறுத்தும் அமையும்.

சம்பளம் :

அரசு விருந்தோம்பல் நிறுவனமாக இருந்தால், ஊதிய விகிதம் தரத்தின் அடிப்படையில் இருக்கும். சராசரி தனியார் துறை சம்பளம் மாதத்திற்கு ரூ. 25ஆயிரம் முதல் ரூ. 50ஆயிரம் வரை இருக்கலாம். இது சராசரி சம்பளம் மட்டுமே. உதாரணமாக, ஐந்து நட்சத்திர போன்ற ஓட்டல்களில் பணி ஓட்டல் மேலாளர்கள் இரண்டு அல்லது மூன்று நட்சத்திர ஓட்டல்களில் பணிபுரியும் மேலாளர்களை விட அதிக சம்பளம் பெறுவார்கள். எந்த படிப்புக்கும் திறமை முக்கியம்.

வெளிநாட்டு வேலை :

நல்ல ஆங்கில மொழியறிவு இருந்தால் உலகின் எந்த நாட்டுக்கும் சென்று வேலை செய்யலாம். வெளிநாட்டு ஓட்டல்கள் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கின்றன. (இன்னும் பேசுவோம்)

இதையும் படீங்க:

மாஸ் கம்யூனிகேஷன் படீங்க..! மாஸ் வேலை வாங்குங்க..! திறமையிருந்தா தேடி வரும் வேலை..!

https://www.instanews.city/education/learn-mass-communication-and-get-a-high-salary-job-1135545மாஸ் கம்யூனிகேஷன் படீங்க..! மாஸ் வேலை வாங்குங்க..! திறமையிருந்தா தேடி வரும் வேலை..! https://www.instanews.city/education/learn-mass-communication-and-get-a-high-salary-job-1135545ங்க..!

Updated On: 2022-05-16T17:08:49+05:30

Related News